

காந்தியடிகளின் நினைவு தினத்தில் அம்பேத்கர் குறித்து ஏன் பேச வேண்டும்? தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை காந்தியுடன் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த ஒருவர் குறித்து இந்நாளில் பேச என்ன இருக்கிறது? காந்தியை மகாத்மா என்று ஏற்றுக்கொள்ளாதவர் அம்பேத்கர். அம்பேத்கர் கருத்துக்கு எதிராக காந்தியும் தனது இதழ்களில் தொடர்ந்து பதில் எழுதிக்கொண்டே இருந்தார்.
இப்படி இவர்களுக்குள் இருந்த பல முரண்பாடுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், காந்தியின் வாழ்க்கையில் நடைபெற்ற மிக முக்கியமான மனமாற்றங்களுக்கு அம்பேத்கர் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்தினார் என்று பார்த்தோமானால், இவர்களுக்குள் இருந்தது பகை முரண் அல்ல என்பது நன்றாகத் தெரியும்.