

அநுர குமார திசாநாயக்க இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்று நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. தெற்காசிய நாடுகளில் நேபாளத்துக்கு அடுத்ததாக, இலங்கையில் இடதுசாரிக் கட்சியின் தலைமையில் (ஜேவிபி) ஆட்சி அமைந்துள்ளது.
இலங்கை வரலாற்றில், இதுவரை கண்டிராத அளவுக்கு 225 நாடாளுமன்றத் தொகுதிகளில் 159இல் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றிபெற்று, மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இடங்களைப் பிடித்ததும், ராஜபக்ச, சஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்க போன்ற தலைவர்களை மக்கள் நிராகரித்ததும் நாம் அறிந்ததே. இன்றைய சூழலில், அநுர குமார அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேச வேண்டியது அவசியமாகிறது.