

தமிழகத்தில் மகப்பேறு இறப்புகளைத் தடுக்கும் வகையில் அவசரக் காலக் கட்டுப்பாட்டு அறை (War room) அமைக்கும் பணியைத் தமிழகச்சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மகப்பேறு இறப்பைக் குறைக்கப் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்காமல், கட்டுப்பாட்டு அறையை மட்டும் அமைப்பது தீர்வாகாது.
பொதுவாக, பிரசவம் என்பது வலி நிறைந்தது. ஆனால் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில், மகப்பேறு மருத்துவர்கள் அதிகப் பணிச் சுமையுடன் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மகப்பேறும் உண்மையில் பெரும் வலியையும், வேதனையையும் தருவதாக உள்ளது.