பூமியைக் காப்பவர்களின் எதிர்காலத்துக்கு என்ன உத்தரவாதம்?

பூமியைக் காப்பவர்களின் எதிர்காலத்துக்கு என்ன உத்தரவாதம்?
Updated on
2 min read

நகரமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக உலகில் நுகர்வுக் கலாச்சாரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தனிநபர் நுகர்வு பெரிதும் அதிகரித்துள்ளது. இது அதிகக் கழிவு உருவாக வழிவகுக்கிறது. மறுபுறம், மறுசுழற்சிக் கழிவுகளும் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை. இப்படியான சூழலில், கழிவு மேலாண்மைத் துறையின் வளர்ச்சி அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வேகமாக வளரவில்லை.

தெருக்​கள், சாலைகள், சந்திப்பு​கள், ஆற்றங்​கரைகள் உள்ளிட்ட இடங்​களில் மறுசுழற்சிக் கழிவு​களோடு சேர்த்து சட்ட​விரோத​மாகக் குப்​பைகள் கொட்​டப்​படு​கின்றன. இதனால் பூமிக்கு உண்டாகும் பாதிப்பை அறிவதற்​குக்​கூட மக்கள் தயாராக இல்லை. முறை​சா​ராக் குப்பை பொறுக்​குபவர்​களின் (Informal waste pickers அல்லது rag pickers) பங்களிப்பு காரண​மாகவே திடக்​கழிவு மேலாண்​மைத் துறை ஓரளவு தப்பிப்​பிழைக்​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in