

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் ‘அபிமன்யு’ என்ற சிறுகதையை எழுதியுள்ளார். புராணக் கதையை மறுவிசாரணை செய்யும் கதை இது. இளைஞனான அபிமன்யு இறந்து கிடக்கிறான். அர்ஜுனன் போர்க்களத்தை உற்றுப் பார்க்கிறான். கால்களில் இடறும் வீரர்களின் அங்கங்களைக் கண்டு பதறுகிறான். அபிமன்யுவிற்கு அர்ஜுனன் தந்தை.
தந்தையாகவும் கணவனாகவும் அண்ணனாகவும் தம்பியாகவும் இறந்து கிடக்கும் ஒவ்வொரு வீரனும் ஏதோவொரு வகையில் பிறருக்கும் உறவினர்கள்தானே! அபிமன்யு வீரன்தான்; அவனைப்போன்று ஒவ்வொருவரும் முக்கியம்தானே? சூதர்கள் அபிமன்யுவை மட்டும் புகழ்ந்து பாடுகிறார்களே! கடோத்கசனும் போரில் வீரமரணம் அடைந்தவன்தான்; கடோத்கசன் வீரன் இல்லையா? யுவனின் ‘அபிமன்யு’ சிறுகதை அளவில் சிறியதாக இருந்தாலும் பிரதி எழுப்பும் கேள்விகள் முக்கியமானவையாக இருக்கின்றன.