

இந்தியாவின் பழங்கால வரலாற்றில் ஒரு மைல்கல்லான சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை சர் ஜான் மார்ஷல் அறிவித்து 100 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. இந்த நாகரிகத்தின் முத்திரையில் கிடைத்துள்ள எழுத்துகள் என்ன மொழியில் உள்ளன என்பது இன்னும் படித்தறியப்படவில்லை.
அண்மையில், சிந்துவெளி நாகரிகத்தின் நூறு ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடிய தமிழ்நாடு அரசு, இந்த எழுத்துகளைப் படித்தறிபவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசை அறிவித்திருக்கிறது. சிந்துவெளி நாகரிகத்தின் மீதான அதிகமான ஆர்வத்துக்கு முக்கியக் காரணம் என்ன?