

மக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வேண்டித்தான் கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்பு என்பது இரண்டு வகைப்படும். பாரம், காற்று, நிலநடுக்கம் போன்ற தாக்கங்களிலிருந்து காப்பது முதல் நிலை. சிறுசிறு சிதைவுகளிலிருந்து காப்பது இரண்டாம் நிலை.
சிறு சிதைவுகள் என்பதால் இழப்புகளும் சிறிய அளவில் இருக்கும். அதற்காக நாம் பாராமுகமாக இருந்துவிட முடியாது. குறிப்பாக, இரண்டு நிகழ்வுகள் பலரின் கவனத்தை ஈர்க்காமல் தொடர் நிகழ்வாக அரங்கேறுகின்றன.