

பன்னெடுங்காலமாக மனிதர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சூதாட்டத்தின் வடிவங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. கிரிக்கெட்டில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நடக்கும் சூதாட்டமும், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் வெற்றி யாருக்கு என்று உலகம் முழுவதும் நடக்கும் சூதாட்டமும் வெகு பிரசித்தம்.
நம் உயிர் போவதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்தால்கூட அந்த அவகாசத்தில் ‘ஆன்லைன் ரம்மி’ விளையாடிச் சம்பாதிக்கலாம் என்று வரும் விளம்பரங்களை அண்மைக்காலமாகப் பார்த்திருக்கலாம். மேற்கூறிய வடிவங்கள் மட்டுமே சூதாட்டம் என்று தவறாக நம்பிவிடக் கூடாது. பங்குச் சந்தையில் நடைபெறும் சூதாட்டத்தின் ஆபத்துகளையும் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது!