

ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு இட்டுச் செல்லும் கனவு முதல் நிலவுப் பயணம், செவ்வாய்ப் பயணம், விண்வெளியில் குடில் உருவாக்குதல் போன்ற இஸ்ரோவின் எதிர் காலக் கனவுகளுக்கு இந்தத் தொழில்நுட்பப் பரிசோதனை வழிகோலியுள்ளது.