

சின்னத்திரை நடிகை சித்ரா சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் தந்தையும் அதே முடிவை எடுத்தது அண்மையில் அதிர்ச்சி அளித்த சம்பவம். ஒவ்வொரு தற்கொலைக்கும் பன்முகக் காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும், அச்செய்தி ஊடகங்களில் எப்படி வெளியிடப்படுகிறது என்பதும் தற்கொலை அதிகரிக்க ஒரு காரணம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
தற்கொலை தொடர்பான செய்தியை வெளியிடுவதில் இன்னும்கூட ஊடகத்தினர் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமல்ல... திரைப்படங்கள், நாடகங்கள், வலைப்பூக்கள், புத்தகங்கள், சமூக வலைதளங்கள் என அனைத்துமே ஊடகங்கள்தான்.