

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
ஒவ்வோர் உயிரினமும் அதன் செயல்பாடுகளுக்கு ஏற்ற அளவிலான புலன்களை, புலன் உறுப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றின் புலன் அனுபவங்களைச் சேகரிக்கும் நினைவாற்றல் கொண்ட நரம்பு மண்டலங்களையும் பல உயிரினங்கள் பெற்றுள்ளன. உதாரணமாக நாய்கள், அதிசயிக்கத்தக்க வகையில் நினைவாற்றலுடன் செயல்படுகின்றன. இதுபோன்ற அம்சங்கள் பல உயிரினங்களிடையே இருந்தாலும் மனிதர்களின் நரம்பு மண்டலம் மிக அதிக வளர்ச்சி பெற்றதாக இருக்கிறது.