

டேவிட் லிஞ்சின் திரைப்பட பாணி, நனவோடை உத்தியை அமெரிக்க சினிமாவில் அறிமுகப்படுத்திய விதத்தில், தனித்த சிறப்பம்சம் பெற்றவை. கண்களுக்கு எளிதில் புலப்படாத, மறைத்துவைக்கப்பட்ட பிரச்சினைப்பாடுகளைத் தாளமுடியாத யதார்த்தத்துடன் லிஞ்சின் படங்கள் இருண்ட காட்சிவெளிகளோடு பிணைந்து திரையில் ஒளிப்படுத்துபவை.
1967இல் லிஞ்சினது திரைவாழ்வு Six Men getting Sick என்ற பரிசோதனை அனிமேஷன் குறும்படத்தை இயக்குவதன் வாயிலாகத் தொடங்குகிறது. அதற்கு முன்பு, அவரது வித்தியாசப்பட்ட திரைப்பட பாணியை முன்னறிவிப்பு செய்யும்விதமாக, அந்த அனிமேஷன் படத்திற்குள் ஓவியம், சிற்பம் ஆகியவையும் இணைக்கப்பட்டுப் புதிய வகையிலான வடிவில் அமைந்தது.