

புத்தகத் திருவிழாவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பதிப்பகங்களின் புத்தகக் காட்சியுடன் கருத்தரங்கம், பயிலரங்கம், பயிற்சிப்பட்டறை, குழு விவாதம் எனப் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். தொடக்க விழாவையொட்டி திருக்குறள் தொடர்பாக நடந்த குழு விவாதத்தில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மீனா கந்தசாமி, முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, அமெரிக்கத் தமிழறிஞர் தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா ஆகியோர் பங்கேற்றனர். கவிஞர்கள் சுகிர்தராணி, குட்டிரேவதி, மனுஷ்யபுத்திரன், பேராசிரியர் ராஜன்குறை, பத்திரிகையாளர் விஜயசங்கர் உள்ளிட்ட பலரும் சிறப்பு அமர்வுகளில் பங்கெடுத்தனர்.
64 நாடுகள் பங்கேற்பு: இந்தப் புத்தகத் திருவிழாவில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் போலந்து, இத்தாலி, ரஷ்யா, ஈரான், நார்வே, இஸ்ரேல், துருக்கி உள்பட 64 நாடுகளின் பதிப்பகத்தினர் 70 மொழிகளில் அரங்குகள் அமைத்துள்ளனர். அவர்கள் தங்கள் அரங்குகளில் தங்களின் பதிப்பகம் பல்வேறு மொழிகளில் வெளியிட்ட நூல்களை அழகாகக் காட்சிப்படுத்தி உள்ளனர்.