

எழுபது, எண்பதுகளில் பொங்கல் திருவிழா நாள்களில் வண்ணவண்ண வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி, நம் அன்பினை வெளிப்படுத்தியதும் பதிலுக்கு நன்றி வாழ்த்து மடல்களை எதிர்நோக்கிக் காத்திருந்ததும் சுகமான தருணங்கள். பொங்கல் வாழ்த்து வந்த கதை இன்னும் சுவாரசியமானது.
1930களில் பெ.தூரனும் அவருடைய நண்பர்களும் இணைந்து விவாதித்தபோது, கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல்களைப் போல பொங்கல் விழாவுக்கு வாழ்த்து மடல்கள் அனுப்பும் பழக்கத்தினை நம்மிடையே உருவாக்கலாமே என்கிற எண்ணம் அவர்களுக்கு உருவானது.