

சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இது தொடர்பாக ஜான் ஹூபர்ட் மார்ஷல் (Sir John Hubert Marshall) அறிக்கையில் கூறப்பட்டுள்ள சான்றுகள் பற்றி நாம் அறிவோம். ஆனால், அதன் பிறகு இந்த 100 ஆண்டுகளில் சிந்துவெளிப் பகுதியில் நடைபெற்ற அகழாய்வுகள், அதில் வெளிப்பட்ட பொருள்கள், அவற்றின் மீதான அறிவியல் பரிசோதனைகள் குறித்துத் தெரிந்துகொள்வது அவசியம்.
சிந்துவெளிப் பொருள் பண்பாடு: இந்த 100 ஆண்டுகளில் ஹரப்பா பகுதியில் வாழ்ந்த மக்கள், அவர்களது பொருள் பயன்பாட்டுப் பண்பாடு என ஏராளமான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன, நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சிந்துவெளிப் பகுதியில் இதுவரை 3,000க்கும் அதிகமான இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதாவது, 5 கி.மீ. இடைவெளியில் ஒரு சிந்துவெளித் தொல்லியல் தடம் என்கிற அளவில் ஹரப்பா முதல் மொகஞ்ச தாரோ வரை, ஆப்கானிஸ்தான் முதல் லோத்தல் (குஜராத்) வரை காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.