

ஆலன் டூரிங்கைச் சந்தித்துவிட்டுத் திரும்பியபோது பலவிதமான எண்ணங்கள் என்னையும் செய்மெய்யையும் ஆட்கொண்டன. எங்கள் மெய்நிகர் கால இயந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் எங்களை எங்கள் அறைக்குக் கொண்டு வந்துவிட்டபோதும், நினைவுகள் சுழன்றுகொண்டே இருந்தன.
“உலகப் போரில் எனிக்மா புதிரை உடைத்தார் ஆலன் என்பது மட்டுமல்ல, 1940களில் அவர் ‘ஆட்டோமேட்டிக் கம்ப்யூட்டிங் இன்ஜின்’ என்கிற அமைப்பை உருவாக்கி, தரவுகளைச் சேமித்துவைத்து, அதன் மீது செயல்படும் கணிப்பு முறையையும் உருவாக்கினார். 1950இல் அவர் எழுதிய ‘கம்ப்யூட்டிங் மெஷின் அண்டு இன்டெலிஜென்ஸ்’ என்கிற ஆய்வுக் கட்டுரை, புகழ்பெற்ற ‘டூரிங் டெஸ்ட்’ என்கிற கோட்பாடு எல்லாமே முக்கியமானவை.