சிறப்புக் கட்டுரைகள்
தனியார்மயமாகும் காட்டுயிர்ப் பாதுகாப்பு
உலக அளவில் உயிர்ப்பன்மைக்கு எதிரான முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகக் காட்டுயிர்க் குற்றங்கள் அறியப்படுகின்றன. சட்டத்துக்குப் புறம்பான ஆயுதங்கள், போதைப் பொருள்கள், மனிதர்கள் கடத்தப்படுவது போன்ற குற்றங்களுக்கு அடுத்த இடத்தில் காட்டுயிர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களே இருக்கின்றன. அந்த வகையில் உயிர்ப்பன்மை அதிகம் கொண்ட நம் நாட்டின் காட்டுயிர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.
தமிழ்நாட்டின் மேற்கு - கிழக்கு மலைத் தொடர்ப் பகுதிகள், மன்னார் வளைகுடா கடல் பகுதி ஆகியவை அவ்வாறான பல்லுயிர் முக்கியத்துவம் பெற்ற பகுதிகள். வனத் துறையில் அரசு ஊழியர்களாகப் பணியாற்றும் வனக் காவலர்கள், உயர் வன அலுவலர்களால் மட்டுமே காட்டுயிர்க் குற்றங்களைத் தடுத்திட இயலாது.
