இலங்கைத் தேர்தல்கள் - மறு பார்வை

இலங்கைத் தேர்தல்கள் - மறு பார்வை
Updated on
1 min read

‘இலங்கைத் தேர்தல்கள் உணர்த்தும் செய்தி என்ன?’ என்கிற தலைப்பில் தீபச்செல்வன் எழுதிய கட்டுரையை (22.11.2024) படித்தேன். அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் உண்டு. குறிப்பாக –

1. வடக்குக் கிழக்கைச் சேர்ந்த எவரும் அமைச்சுப் பதவிகளில் இல்லை என்பது - அருண் ஹேமச்​சந்திர கிழக்கு மாகாணம் – திருகோணமலையைப் பிரதி​நி​தித்து​வப்​படுத்து​கின்ற பிரதிநிதி ஆவார்.

2. தனிச் சிங்கள அமைச்சரவை அமைக்​கப்​பட்​டுள்ளது என்பது - இராமலிங்கம் சந்திரசேகரன், சறோஜா சாவித்திரி போல்ராஜ் என இரண்டு கேபினெட் அமைச்​சர்கள், அருண் ஹேமச்​சந்​திரா, சுந்தரலிங்கம் பிரதீப் இரண்டு துணை அமைச்​சர்கள் என நான்கு அமைச்​சர்கள் (தமிழர்கள்) உண்டு.

3. 1971இல் அதிபர் பதவியைக் கைப்பற்று​வதற்காக ஜே.வி.பி போராடியது என்பது - அது ஜே.வி.பியின் முதலாவது கிளர்ச்சி. அதில் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றி, சோஷலிஸ ஆட்சி ஒன்றை உருவாக்கவே முயன்​றனர். வெறுமனே சதிப் புரட்சி மூலம் அதிபர் பதவியைக் கைப்பற்று​வதற்காக அந்தக் கிளர்ச்சி மேற்கொள்​ளப்​பட​வில்லை.

அப்போது, இன்று உள்ளதைப் போல ‘நிறைவேற்று அதிகாரம் உள்ள அதிபர்’ முறையும் இருக்க​வில்லை. 1978இல்தான் நிறைவேற்று அதிகாரம் உடைய அதிபர் முறையை அன்றைய பிரதமராக இருந்த ஜே.ஆர்​.ஜெய​வர்த்தன உருவாக்​கி​னார். அதற்கான சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்​பட்டு, அந்த அதிபர் ஆட்சிமுறை நடைமுறைப்​படுத்​தப்​படு​கிறது.

4. 1983இல் தமிழர்கள் மீதான வன்முறையைத் தூண்டியது ஜே.வி.பி என அன்றைய அரசாங்கம் அதைத் தடைசெய்தது என்பது - அந்த வன்முறையைத் தூண்டியதும் வன்முறையை நடத்தி​யதும் ஜே.ஆர். அரசாங்கமே. இது பல நூல்களிலும் அதற்கப்​பால், நாடாளு​மன்​றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்​பினர்​களாலும் வெளிப்​படை​யாகவே பதிவு செய்யப்​பட்​டுள்ளது.

ஜே.வி.பி உள்பட நவ சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகளைத் தடை செய்ததற்கும் பழியை அவர்கள் மீது போடுவதற்கும் இதை ஒரு வாய்ப்பாக ஜே.ஆர். அரசாங்கம் முயன்றது. ஜே.வி.பியை மட்டுமல்ல, தமிழ் விடுதலை இயக்கங்​களையும் அது பயங்கர​வா​திகள் என்று தடைசெய்தது.

5. தமிழ்த் தேசியக் கட்சிகள் உடைந்து தேர்தலில் போட்டி​யிட்டதன் காரணமாகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனது. இதனால்தான் என்.பி.பி. தமிழர் பகுதி​களில் வெற்றியைப் பெறக்​கூடியதாக இருந்தது. தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக நின்றிருந்தால் என்.பி.பி. பின்தள்​ளப்​பட்​டிருக்கும் என்று கட்டுரையில் சொல்லப்​பட்​டுள்ளது. அடுத்த பத்தியில் இதற்கு முரணாக - ‘பயங்​கர​வாதச் சட்டத்தை நீக்க வேண்டும்.

மாவீரர் துயிலும் இல்லங்​களி​லிருந்து ராணுவம் விலக வேண்டும், தமிழர்​களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்​கப்பட வேண்டும், அரசியல் உரிமையைத் தமிழர்​களுக்கு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளுக்காக தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அநுரவுக்கு (என்.பி.பி.)க்கு வாக்களித்​துள்ளனர்’ எனக் குறிப்​பிடப்​பட்​டிருக்​கிறது. இவ்வாறு பல தகவல் பிழைகளும் முரண்​களும் உண்டு. தமிழ்​நாட்டு மக்களிடம் இலங்கைச் சூழலைப் பற்றி இப்படிப் பிழையாக வியாக்​கி​யானப்​படுத்துவது பிழையான புரிதலுக்கே வழி​வகுக்​கும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in