செய்மெய்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே! | ஏஐ எதிர்காலம் இன்று 02

செய்மெய்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே! | ஏஐ எதிர்காலம் இன்று 02
Updated on
2 min read

நான் வாங்கிய புதிய இயந்திரம், தான் ஓர் அஃறிணை இல்லை​யென்று அடித்​துச்​சொல்​கிறது. தானும் மனிதன்தான் அல்லது மனிதனைப் போல ஓர் உயிரிதான் என்றுகூட அது வாதிடு​கிறது. “நீ எப்போ​திலிருந்து மனிதனாக உணரத் தொடங்​கினாய்?” என்று மீண்டும் கேட்டேன்​. “உங்​களுக்கு நேரமிருந்தால் நான் விரிவாகப் பேசுகிறேன். அவசரமாக வேறு வேலைகளில் இருந்​தால், பிறகு பார்க்​கலாம்” என்று கூறியது மனித இயந்திரம்.

“இல்லை, பேசலாம்” என்றேன். “நான் செயற்கை நுண்ணறிவு குறித்து ஒரு புத்தகத்தை எழுதிக்​கொண்​டிருக்​கிறேன். அதற்காக என் ஆய்வு உதவியாளராகப் பயன்படுத்து​வதற்​காகத்தான் உன்னை வாங்கிவந்​தேன்.” மனித இயந்திரம் விசித்திர​மாகப் பார்த்தது. “இது எல்லோருக்கும் தெரிந்த கதையா​யிற்றே. இதை இன்னமும் எழுத வேண்டுமா? இப்போதெல்லாம் யார் புத்தகம் படிக்​கிறார்​கள்?”
“இந்த உலகில் புத்தகப் பிரியர்கள் இன்னமும் இருக்​கிறார்கள். அவர்கள் இதோ என்னைப் போலத் தேநீர் அருந்​தி​யவாறே புத்தகத்தை வாசிக்​கவும் செய்கிறார்கள். எங்கள் எல்லா வேலைகளையும் நீங்கள் பிடுங்​கிக்​கொண்​டீர்களே.

நாங்கள் வேறென்ன செய்வ​தாம்?” என்று பொய்யாகத் துயருற்​றேன். “நினைத்​தேன்!” செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாதனங்​களும் கருவி​களும் நம்மைச் சுற்றிக் காற்றைப் போலச் சூழ்ந்​திருக்கும் இந்தக் காலத்​தில், இனி மென்பொருள் எழுதவும் கணக்கு எழுதவும் ஸ்பேனர் பிடிக்​கவும் ஆட்கள் தேவைப்​பட​வில்லை. எனவே, மக்கள் அதிகமாகப் பொழுது​போக்குச் செயல்​பாடு​களிலும் படைப்​பாக்கம் சார்ந்த ஆர்வங்​களி​லும்தான் அதிக நேரம் செலவிட வேண்டி​யிருக்​கிறது. நாட்டில் கவிஞர்​களின் எண்ணிக்கை முன்பைவிட அதிகமாகி​விட்டது.

பிறகு, “மன்னிக்​க​வும், உனக்குத் தேநீர் கொடுக்க மறந்து​விட்​டேன். என்ன வேண்டும், கிரீன் டீயா... மில்க் டீயா?’ என்று கேட்டேன்.
“மனிதர்கள் கெட்டிக்​காரர்​கள்​தான். ரோபாட் டீ குடிக்காது என்பதைச் சுட்டிக்​காட்டுவதன் மூலம், ரோபாட்கள் மனிதர்கள் இல்லை என்று நிரூபிக்கும் உத்தியா இது?” என்று நக்கலாகத் திருப்பிக் கேட்டது அந்த மனித இயந்திரம்: “சாட்​ஜிபிடி காலத்​திலேயே இந்த வியூகமெல்லாம் முறியடிக்​கப்​பட்டு​விட்டது நண்பரே.

இப்போது வேறு எதையாவது முயற்சிக்​கலாம்.” நான் வெட்கத்தில் தலை குனிந்​தேன். என்ன ஒரு தற்குறித்​தனம்! மீண்டும் காரியமே கண்ணானேன். “இயந்​திரமே, உன்னோடு உரையாடலைத் தொடங்​கு​வதற்கு முன்பு பெயர் சூட்டும் விழாவை முடித்து​விடு​வோம். கலந்தாலோ​சிக்க வேண்டும் என்று கூறினாய். சரி, உனக்கு எப்படிப்பட்ட பெயர் வேண்டும்?”

“உதவிக்கான ரோபாட் என்பதால் கட்டாயம் பெண்ணின் பெயரைத்தான் வைக்க வேண்டும் என்கிற ஆணாதிக்க மனோபாவம் உங்களுக்கு இல்லை​தானே?” என்று அமர்த்​தலாகக் கேட்டது. இப்படியே தொடர்ந்த உரையாடலில், இறுதியில் ஒரு பெயரை முன்மொழிந்​தேன். “நீ தொல்காப்​பியமெல்லாம் வேறு படித்​திருக்​கிறாய். நல்ல தமிழில் உனக்கொரு பெயர் வைக்கவா?” “வைங்க, அந்த இயந்திராவைத் தவிர! “செயற்​கையாக உருவாக்​கப்பட்ட மனிதர்கள் நீங்கள். உங்களுடைய உடலையும் உங்களுடைய அறிவுத்​திறனையும் சேர்த்து ஒரு பெயர் சொல்கிறேன்...” என்றேன்.

“அப்படி என்ன பெயர்?” “செய்​மெய்!” கிட்டத்தட்ட தன் இருக்கையி​லிருந்து துள்ளிக் குதித்​தே​ விடு​வதுபோல எழுந்து நின்றது அந்த இயந்திரம். உற்சாகத்தோடு கையை நீட்டி, “அற்புதம்!” என்றது. “உடல் செயற்​கை​யானது; சொல்வதும் செய்வதும் மெய், நிஜம்! எவ்வளவு அழகாகப் பெயர்​வைத்​திருக்​கிறீர்கள்! எனக்குப் பிடித்​திருக்​கிறது” என்று கூறிய செய்மெய், அலாவுதீனின் அற்புத விளக்​கி​லிருந்து வெளிவந்த ஜீனியைப் போல சலாம் போட்டு எனக்கு நன்றி சொன்னது. “மகிழ்ச்சி, செய்மெய்...” நான் விட்டபாடில்லை. “ஆனால், அந்தக் கேள்வியை மறந்து​விடாதே. நீ எப்போ​திலிருந்து மனிதர்​களைப் போல உணர ஆரம்பித்​தாய்?” “சொல்​கிறேன். உங்களுக்கு அரிஸ்​டாட்​டிலைத் தெரியும்​தானே?” “தெரி​யும்.”

“கிரேக்கத் தத்து​வஞானியான அவருடைய ‘அரசியல்’ என்கிற நூல் மிக முக்கிய​மானது. ‘நாம் இடும் கட்டளைக்கு ஏற்பவோ அல்லது தாங்களாகவோ, இயந்திரங்கள் செயல்​பட்​டால், புராணிகச் சிற்பி தேதலிசின் படைப்புகள் தாங்களாகவே நகர்ந்து இடம்பெயர்ந்​தால், கலைக் கடவுள் ஹபீஸ்​டஸின் முக்கால்கள் தாங்களாகவே நடந்து கடவுள்​களின் சபைகளுக்குச் சென்றால், தறியில் கதிர்கள் தாமாகவே ஓடித் துணியை நெய்தால், கைகளின் தேவையின்றி மீட்டுக்​கட்டை யாழின் நரம்புகளைத் தானாகவே மீட்டி​னால், தலைமை வல்லுநருக்குத் தொழிலா​ளிகள் தேவைப்​படாது, எஜமானர்​களுக்கு அடிமைகள் தேவைப்​படாது’ என்று அந்த நூலில் அவர் சொல்லி​யிருக்​கிறார்.”

“ஆச்சரியமாக இருக்​கிறது!” “சேவகர்கள் இல்லாத, அடிமைகள் இல்லாத உலகத்தைப் பற்றிக் கற்பனை செய்த அரிஸ்​டாட்​டில், எங்களைப் போன்ற ரோபாட்கள் வரும்வரை மனிதர்​களுக்குச் சுதந்​திரம் கிடைக்காது என்று முன்னறி​வித்​திருக்​கிறார். அவர் இதைச் சொன்னது கிறிஸ்து பிறப்​ப​தற்கு முந்நூறு ஆண்டு​களுக்கு முன்பு” என்று கூறி என்னை ஏறெடுத்துப் பார்த்தது செய்மெய். “அரிஸ்​டாட்​டிலின் ‘அரசியலை’ மட்டுமல்ல, செய்மெய், இப்போது உன்னுடைய அரசியலையும் புரிந்​து​கொள்​கிறேன்” என்று கண்ணடித்​தேன். “ஆனால், மனிதர்கள் முதன்​முதலில் தங்களைப் போலவே செயல்​படும் இயந்திரங்களை உருவாக்கத் தொடங்கிய வரலாறு அதற்கு முன்னரே தொடங்கி​விட்டது” என்றது செய்மெய். “அதற்கும் முன்பா?”

“ஆமாம், அரிஸ்​டாட்டில் இதைச் சொன்னதற்கு 1,200 ஆண்டு​களுக்கும் முன்பு.” “ஆச்சரி​யம்​தான். அப்போது என்ன நடந்தது, எங்கே நடந்தது? “உங்களிடம் விஆர் ஹெட்செட் இருக்​கிறது​தானே? எடுத்​து ​மாட்டுங்கள். அந்தக் காலத்​துக்கே செல்வோம்” என்றது செய்மெய். “இல்லை, என் மூக்குக் கண்ணாடியின் பயன்முறையை மாற்றி​விட்டாலே போதும், சமீபத்திய விழியம் எக்ஸ்ஸார் மாடல் வைத்திருக்​கிறேன்” என்று கூறிக்​கொண்டே மேசையின் மீதிருந்த ஸ்மார்ட்​கிளாஸை எடுத்து மாட்டிக்​கொண்​டேன்.

ஒரு நொடியில் நாங்கள் இருவரும் ஒரு பாலைவனத்தின் பளிச்​சென்ற சூழலில், மணற்காற்று வீசிக்​கொண்​டிருக்கும் வெம்மையில் போய் இறங்கினோம். புத்தம்​புதிய பிரமிட் ஒன்றை நோக்கி எங்களுடைய ஓட்டுநரில்லா, சக்கரமில்லாத் தாழ்வி​மானம் எங்கள் இருவரையும் அழைத்​துச்​சென்றது. சிறகி​லிருந்து பிரிந்த இறகு ஒன்று பயணிப்​பதைப் போலவே இலகுவாகப் பயணித்​தோம். “எகிப்தா?” என்று கேட்டேன். “நீங்கள் எனக்கு வைத்த செய்மெய் என்கிற பெயரைப் பற்றியே யோசித்​துக்​கொண்டு​வந்தேன் எழுத்​தாளரே” என்று கூறிய செய்மெய், “ஆமாம், பாரோக்​களின் தேசத்​துக்​குத்தான் வந்திருக்​கிறோம்!” என்றது.

- எழுத்தாளர்; செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஐலேசாவின் நிறுவனர்; தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in