Last Updated : 26 Sep, 2024 06:18 AM

 

Published : 26 Sep 2024 06:18 AM
Last Updated : 26 Sep 2024 06:18 AM

ப்ரீமியம்
கொசுக்களை வளர்த்தெடுக்கும் காலநிலை மாற் றம்!

தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்க இருக்கும் காலம் இது. வழக்கம்போல் கொசுக்களுக்குக் கொண்டாட்டம் கூடும் நேரம். டெங்கு, ஸிகா, சிக்குன்குனியா போன்ற கொசுக்கடி நோய்கள் அதிகரிக்கும் வேளை இது. இவற்றில் டெங்குவின் ஆட்டம் இப்போதே தொடங்கிவிட்டதாகத் தமிழக அரசு எச்சரித்திருக்கிறது.

கடந்த எட்டு மாதங்​களில் தமிழகத்தில் 14,560 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்​டிருக்​கிறது. ஏழு பேர் உயிரிழந்​திருக்​கிறார்கள். சென்னை, கோயம்​புத்​தூர், கிருஷ்ணகிரி, திருப்​பூர், திருவள்​ளூர், தேனி, மதுரை, திருநெல்​வேலி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்​டங்​களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக அரசின் புள்ளி​விவரம் தெரிவிக்​கிறது. ஆறு வருடங்​களுக்குப் பிறகு டெங்கு பாதிப்பு எண்ணிக்கை இப்போது பத்தாயிரத்தைக் கடந்திருக்​கிறது. 2012இல் 13,204 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு, 66 பேர் உயிரிழந்​தனர். 2017இல் 23,294 பேர் பாதிப்​படைந்​தனர்; 65 பேர் உயிரிழந்​தனர். கடந்த ஆண்டில் 9,121 பேருக்குப் பாதிப்பும், 12 பேருக்கு உயிரிழப்பும் ஏற்பட்டன. இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு இப்போதே ஏறுமுகத்தில் இருப்​பதுதான் நம்மை அச்சுறுத்து​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x