

ஐ
ரோப்பிய ஒன்றியம்போல ஆப்பிரிக்க ஒன்றியமும் ஒரே வர்த்தக அமைப்பாக மாறுகிறது. ‘ஆப்பிரிக் கக் கண்ட தடையற்ற வர்த்தகப் பிரதேச ஒப்பந்தம்’ கடந்த மார்ச் மாதம் கையெழுத்தானது. ஆப்பிரிக்க ஒன்றியத்தில் உள்ள 55 நாடுகளில் 44 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. சரக்குகளையும் சேவைகளையும் இந்த அமைப்பின் நாடுகள் தடையின்றி தங்களுக்குள் பரிமாறிக்கொள்ள முடியும். அத்துடன் தொழிலாளர்களும் முதலீடும்கூட நாடு விட்டு நாடு இடம் பெயர முடியும். சுங்க வரியை வசூலிக்கக்கூட பொதுவான ஊழியர் அமைப்பு ஏற்படுத்தப்படும்.
ஆப்பிரிக்க நாடுகளுக்குள்ளான வர்த்தகம் 2011-ல் 8% ஆக இருந்தது இப்போது 15% ஆக உயர்ந்திருப்பதை ‘மூடிஸ்’ நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. 2016-ல் ஆப்பிரிக்க நாடுகள் செய்த மொத்த ஏற்றுமதியில் 18%தான் உள்நாட்டுக்குள்ளேயே நடந்திருக்கிறது. ஆசியாவில் இது 59% ஆகவும் ஐரோப்பாவில் 69% ஆகவும் இருப்பதை ‘புரூக்கிங்ஸ்’ நிறுவனம் தெரிவிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் பல ஆப்பிரிக்க நாடுகள், உலகில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில், இந்த அமைப்பு மேலும் நெருக்கமான வர்த்தக ஒத்துழைப்புக்கு உள்ள வாய்ப்பை இந்த ஒப்பந்தம் பயன் படுத்திக் கொள்ளும். ஆப்பிரிக்க நாடுகளி லிருந்து தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அளவைப் போல இரண்டு மடங்கு, சக ஆப்பிரிக்க நாடுகளுக்கு இப்போது ஏற்றுமதி ஆவதை மூடிஸ் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. ஆப்பிரிக்க நாடுகளுக்குள் தொழில் - வர்த்தக உறவுகள் விரிவடைந்தால் உற்பத்தி முடித்த பொருட் களையும் மூலப் பொருட்களையும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கும் நிலையிலிருந்து, முழுக்க முழுக்க ஆப்பிரிக்காவிலேயே தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளாக மாறிவிடும் என்று கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தால் தொடக்க காலத்தில் காப்பு வரி வருவாய் குறையும், அடுத்த கட்டத்துக்கு மாறும்போது சில நாடுகளுக்கு வருவாயைப் பெருக்கவும் பலவற்றுக்குக் குறைக்கவும்கூட இது காரணமாகிவிடும். இதை வர்த்தகம்-வளர்ச்சிக்கான ஐநா மாநாடு சுட்டிக்காட்டுகிறது. இந்த வர்த்தக உடன்பாடு 90% பொருட்களையும் சேவை களையும் உள்ளடக்கியது. வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடியவை இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தை ஆப்பிரிக்க நாடுகளின் தலைநகரங்கள் விவாதித்து ஒப்புதல் தர வேண்டும். இந்த ஆண்டின் இறுதியில் இது முழுவடிவம் பெறும்.
ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றின் மின்உற்பத்தி, போக்குவரத்துத் திட்டங்களில் சீனா இருப்பதைக் கூறுவது சற்று மிகைப்படுத்தலாகக்கூடத் தோன்றும். அதே வேளையில், டொனால்டு டிரம்ப் அதிபரானது முதல் ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்கா முதலீடு செய்வதும் குறைந்துவருகிறது. உலக ராணுவ வியூகச் செயல்களிலும் பொருளாதாரப் பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர் ஆப்பிரிக்கத் தலைவர்கள். அதே சமயம், ஜனநாயக உரிமைகளையும் அரசியல் சட்டம் அளித்துள்ள கொள்கை களையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜனநாயக உரிமைகளும் அரசி யல் சட்டப்படியான ஆட்சியும் தொடர் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை!
©‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி