Published : 19 Jun 2024 06:36 AM
Last Updated : 19 Jun 2024 06:36 AM
காலந்தோறும் பெருந்திரளான மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதும் அதற்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழுவதும் உலகமெங்கும் நிகழ்ந்து வந்திருக்கிறது. உழைக்கும் மக்களின் விடுதலை உணர்வும் நியாயமான கோபமும் சுயமரியாதையும் அவர்கள் கிளர்ந்தெழக் காரணங்களாக இருந்திருக்கின்றன. நிறரீதியிலான ஆதிக்கம், ஆதிக்கச் சாதி ஆகியவற்றோடு எப்போதும் இணைந்தே இருக்கும் முதலாளியம், உழைக்கும் மக்களின் வறுமையைத் தீர்த்திட அக்கறை காட்டிய வரலாறு மிகக் குறைவு. அதனாலேயே உழைக்கும் மக்கள் தமக்கான விடுதலையையும், வரலாற்றையும், கலைகளையும் தாமே ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
உலக அளவில் இதற்கு மிகச் சிறந்த சான்று, ஆப்ரிக்க அமெரிக்கர்கள். பல நூற்றாண்டுகளாக உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளான அவர்கள், அதிலிருந்து மீண்ட வரலாற்றையும் அதை நினைவுபடுத்திக்கொள்ளும் விதமாக முன்னெடுக்கும் கொண்டாட்டங்களையும் உலகமெங்கும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் மக்களுக்குப் படிப்பினைகளைத் தந்துகொண்டே இருக்கின்றனர். அவர்களது வாழ்வின் ஒவ்வொரு சவாலான தருணத்தையும் இசை, பாட்டு, நடனம் ஆகியவற்றின் துணையோடு மிக யதார்த்தமான எத்தனிப்புகளுடன் கடந்துவிடுகின்றனர். ஓர் ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான காரணங்கள் அவர்களுக்கு இருந்தபோதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கொண்டாட்டம் ‘ஜூன்டீன்த்’.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT