Last Updated : 18 Jun, 2024 09:00 AM

 

Published : 18 Jun 2024 09:00 AM
Last Updated : 18 Jun 2024 09:00 AM

ப்ரீமியம்
புவி வெப்பமாதல்: தீர்வு என்ன?

கடந்த காலங்களில், உலக நாடுகள் நீர் - காற்று மாசுபடுதல், திடக்கழிவுகள், காடுகளின் அழிவு, நீர்நிலைகள் அழிப்பு, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல், பல்லுயிர்ப் பெருக்கத்தில் விரும்பத்தகாத மாற்றங்கள், மண் அரிப்பு மற்றும் மண்வளம் குன்றுவது போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் மேற்சொன்ன பிரச்சினைகளுடன் ‘காலநிலை மாற்றம்’ குறிப்பாக, ‘புவி வெப்பமாதல்’ என்ற ஒரு சீரிய பிரச்சினையும் சேர்ந்து உலகை ஆட்டிப்படைக்கிறது.

புதிய சவால்கள்: கடுமையான வெப்ப அலை; அதனால் மனிதர்கள், விலங்குகள், பறவைகளுக்கு ஏற்படும் நோய்கள், நீண்ட கால வறட்சியால் நகர்ப்புறங்களுக்குக் குடிபெயரும் சுற்றுச்சூழல் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்தல், மிகுந்த சேதங்களை விளைவிக்கும் புயல், வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம், பருவ மழையில் பிறழ் மாற்றம், சர்வ நாசம் விளைவிக்கும் நிலச்சரிவுகள், அளவுக்கு அதிகமாகப் பனி உருகுதல், அதனால் ஏற்படும் கடல் மட்ட உயர்வு, கடல் நீரின் வெப்பநிலை உயர்வினால் பவழப்பாறைகள் - மீன்களுக்கு ஏற்படும் அழிவு போன்றவை புவி வெப்பமாதலின் விளைவுகளே. இந்தத் தாக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் எளிதில் கணிக்க முடியாது என்பதுதான் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். உதாரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தை முன்கூட்டியே சரியாகக் கணிக்க முடியாதது புவி வெப்பமாதல் நமது அறிவியலுக்கு விடுக்கும் ஒரு சவாலாகும். மேலும், புவி வெப்பமாதலானது, மற்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் போலன்றி அதன் தன்மைகளைப் பகுப்பாய்வு செய்வதிலும், சரியான தரவுகளைப் பெறுவதிலும், தீர்வுகளைக் கண்டறிதலிலும் மிகுந்த சவால்களையும் முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்துகிறது. உலகின் சராசரி வெப்பநிலை 1980இலிருந்து தொடர்ந்து அதிகரித்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் 175 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 1.32 டிகிரி செல்சியஸ் அதிகப்படியாக உயர்ந்துவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x