Published : 11 Jun 2024 09:58 AM
Last Updated : 11 Jun 2024 09:58 AM

ப்ரீமியம்
100ஐத் தாண்டாத பெண்கள் | மக்களவை மகா யுத்தம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா (2023), நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு நடை பெற்றுள்ள மக்களவைத் தேர்தல் இது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலைவிட (78) குறைவான எண்ணிக்கையிலேயே (74) பெண்கள் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

எண்ணிக்கையும் சதவீதமும்: 1957இல் 494 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாவது மக்களவைத் தேர்தலில் 1,474 ஆண்களும் 45 பெண்களும் போட்டியிட்டனர். ஆண்களில் 472 பேரும் பெண்களில் 22 பேரும் வென்றனர். இவர்களின் வெற்றி விகிதம் முறையே 32.02%, 48.89%. அதற்குப் பிறகு - தற்போதைய தேர்தல் வரை பெண்களின் வெற்றி விகிதமே அதிகம். அதாவது, பெண் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க விரும்புவதில்லை என்கிற பொதுப்புத்திக்கு மாறாக, பெண்களின் வெற்றி விகிதம் ஆண்களைவிட அதிகம். இருந்தாலும், எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்கள் பெரும் வீழ்ச்சியைத்தான் சந்தித்துவருகிறார்கள். இந்த முறை திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் அதிக சதவீதத்தில் (38%) பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இது பெருமிதமான புள்ளிவிவரம் போல் தோன்றினாலும் அக்கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 11 என்பது எண்ணிக்கைக்கும் சதவீதத்துக்குமான தோற்ற மயக்கத்தைக் காட்டுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x