Published : 10 Apr 2024 06:55 PM
Last Updated : 10 Apr 2024 06:55 PM

வட சென்னை மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் வட சென்னை மிகவும் பழமையானது. வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. 1952-ல் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் ‘மெட்ராஸ்’ தொகுதியில் வட சென்னையும் அடங்கும். அப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.டி.கிருஷ்ணமாச்சாரி வெற்றிபெற்றார். 1957 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி உருவானது.

வட சென்னையில் முதல் எம்.பி. என்ற பெருமையைப் பெற்றவர் அந்தோணிப் பிள்ளை. இவர் சுயேட்சையாகக் களமிறங்கி சாதனை படைத்தார். 1962-ல் முதல் முறையாக காங்கிரஸ் வென்றது. கடந்த 2009-ல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு கொளத்தூர், ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், பெரம்பூர், திருவிக நகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வட சென்னையில் உள்ளன.

மீனவ மக்கள் கணிசமாக வசிக்கும் தொகுதி. ரயில் பெட்டி தொழிற்சாலை உட்பட பல ஆலைகள் உள்ள பகுதி என்பதால் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக வட சென்னை இருக்கிறது. தொழில் வளர்ச்சிக் காரணமாக தமிழகத்தின் மற்ற மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் இந்த தொகுதிக்குள் அதிகமாக வசிக்கிறார்கள்.

திமுக தொடங்கிய காலத்திலிருந்து வட சென்னை தொகுதியில் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்களான நாஞ்சில் மனோகரன், ஆசைத்தம்பி, என்.வி.என்.சோமு, தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, டி.கே.எஸ் இளங்கோவன் எனப் பலர் இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால், திமுகவைப் போலவே, இடதுசாரி கட்சிகளுக்கும் இங்கு வலிமையான தளம் உள்ளது. குறிப்பாக, இடதுசாரி தலைவர் தா.பாண்டியன் போட்டியிட்டு வென்ற தொகுதி. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவும் தனது செல்வாக்கை நிரூபித்து வெற்றி பெற்றது.

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் உள்ள ஆர்.கே.நகரில் தொகுதியில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அதுமட்டுமில்லாமல், திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர், அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வென்ற ஆர்.கே.நகர் என முக்கிய தலைவர்களை இந்தத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ ராயபுரம்
⦁ ஆர்.கே.நகர்
⦁ திருவொற்றியூர்
⦁ பெரம்பூர்
⦁ கொளத்தூர்
⦁ திருவிக நகர் (தனி)

வடசென்னை தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,84,689
ஆண் வாக்காளர்கள்: 7,24,968
பெண் வாக்காளர்கள்: 7,59,208
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:513

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்


ஆண்டு
வெற்றி பெற்றவர்
2-ம் இடம் பிடித்தவர்
1971 நாஞ்சில் மனோகரன், திமுக விநாயக மூர்த்தி, ஸ்தாபன காங்

1977

ஆசைதம்பி, திமுக
மனோகரன், அதிமுக
1980 லட்சுமணன், திமுக அப்துல்காதர், அதிமுக

1984
என்.வி.என்.சோமு திமுக லட்சுமணன், காங்
1989 தா.பாண்டியன் காங் என்.வி.என்.சோமு, திமுக

1991
தா.பாண்டியன் காங் ஆலடி அருணா, திமுக
1996
என்.வி.என்.சோமு, திமுக

தா.பாண்டியன், காங்

1998

குப்புசாமி, திமுக
சபாபதி மோகன், மதிமுக

1999
குப்புசாமி, திமுக சவந்திரராஜன், சிபிஎம்

2004
குப்புசாமி, திமுக சுகுமாறன் நம்பியார், பாஜக

2009
டி.கே.எஸ் இளங்கோவன், திமுக
தா.பாண்டியன், சிபிஐ
2014
வெங்கடேஷ் பாபு, அதிமுக
கிரிராஜன், திமுக
2019 DR. கலாநிதி வீராசாமி, திமுக அழகாபுரம் R. மோகன்ராஜ், தேமுதிக


2019-ம் ஆண்டு வடசென்னை மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு வடசென்னை மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x