

தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள இந்தத் தொகுதி, நெய்வேலி என்எல்சி நிறுவனம், கடலூர் துறைமுகம் எனப் பல அடையாளங்களைக் கொண்டது. என்எல்சி நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களிலும் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தத் தொகுதியில் வசிக்கின்றனர்.
கடலூர் புனித டேவிட் கோட்டையில் இருந்து இந்தியாவின் தென் பிராந்தியத்தை ஆங்கிலேயர்கள் ஆண்டுவந்துள்ளனர். வணிகத் தொடர்புகளுக்கும் கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர். பாடலீஸ்வரர் கோவில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், விருத்தகிரீஸ்வரர் கோவில், சத்தியஞான சபை, வீரட்டானேஸ்வர் கோவில், சரநாராயணபொருமாள் கோவில், வைத்தியநாதசுவாமி கோவில் ஆகிய ஆன்மிகத் தலங்கள் உள்ளது.
கடலூர் துறைமுகமும், மீன்பிடித் தொழிலும் முக்கிய வருவாய் ஈட்டும் தொழிலாக உள்ளன. பண்ருட்டி பகுதியில் விளையும் முந்திரி முக்கிய விவசாயமாக இருந்து வருகிறது. முந்திரி ஏற்றுமதியும் இந்தப் பகுதியில் அதிக அளவில் நடைபெறுகிறது. குறிப்பிட்ட சில நகரங்களைத் தவிர பொதுவாகக் கிராமப்புற பகுதிகளே இங்கு அதிகம்.கடலூர் தொகுதியைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாகவே காங்கிரஸ் வென்று வரும் தொகுதியாக இருந்துள்ளது. கூட்டணியிலும் காங்கிரஸுக்கே அதிகமுறை இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஓரிருமுறை இங்கு வென்றுள்ளன. எனினும் இருகட்சிகளும் வழக்கமாக இந்தத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுவதில்லை. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
• கடலூர்
• பண்ருட்டி
• நெய்வேலி
• விருதாச்சலம்
• திட்டக்குடி (தனி)
• குறிஞ்சிபாடி
கடலூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,01,392
• ஆண் வாக்காளர்கள்: 6,88,269
• பெண் வாக்காளர்கள்: 7,12,909
• மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 214
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | 2-ம் இடம் பிடித்தவர் |
| 1971 | ராதாகிருஷ்ணன், காங் | முத்துகுமரன், ஸ்தாபன காங் |
1977 | பூவராகவன், காங் | ராதாகிருஷ்ணன், ஸ்தாபன காங் |
1980 | முத்துகுமரன், காங் | அரவிந்த பாலா பஜானோர், அதிமுக |
| 1984 | வெங்கடேசன், காங் | ராமு, திமுக |
1989 | வெங்கடேசன், காங் | பாஸ்கரன், திமுக |
1991 | கலிய பெருமாள், காங் | பூவராகவன், ஜனதாதளம் |
| 1996 | வெங்கடேசன், தமாகா | சாந்தமூர்த்தி, காங் |
| 1998 | தாமோதரன், அதிமுக | வெங்கடேசன், தமாகா |
| 1999 | ஆதிசங்கர், திமுக | தாமோதரன், அதிமுக |
2004 | வேங்கடபதி, திமுக | ராஜேந்திரன், அதிமுக |
| 2009 | கே.எஸ். அழகிரி, காங் | சம்பத், அதிமுக |
| 2014 | அருண்மொழி தேவன், அதிமுக | நந்தகோபால கிருஷ்ணன், திமுக |
2019 | டி. ஆர். வி. எஸ். ரமேஷ், திமுக | Dr. R கோவிந்தசாமி, பாமக |
2019-ம் ஆண்டு கடலூர் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2024-ம் ஆண்டு கடலூர் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்