தென்காசி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

தென்காசி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024
Updated on
2 min read

தென் மாவட்டத்தில் இருக்கக் கூடிய ஒரே தனித்தொகுதி தென்காசி. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதியில் அமைந்துள்ள இந்தத் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக முழுக்க முழுக்க நெல்லை மாவட்டத்துக்குள்ளாக இருந்தது.அதன்பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், விருதுநகர் மாவட்டத்தின் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்தத் தொகுதி.

விவசாயத்தையே இத்தொகுதி மக்கள் பெரும்பாலும் நம்பியிருக்கின்றனர். தவிர, சங்கரன்கோவிலில் விசைத்தறி பிரதானமான தொழிலாகவுள்ளது. தற்போது விவசாயமும் நலிந்துவரும் நிலையில் பிழைப்புக்காக மக்கள் அண்டை மாநிலங்களை நாடிச் செல்லும் நிலை உள்ளது. அருவிகளுக்குப் பெயர்பெற்ற குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் சீசன் காலம். இக்காலங்களில் சுற்றுலாத் தொழில் அப்பகுதி மக்களுக்குக் கைகொடுக்கிறது.

நீண்டகாலமாகவே காங்கிரஸ் வென்று வந்த இந்தத் தொகுதியில் 90களுக்குப் பிறகே மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் அருணாச்சலம் நீண்டகாலம் இந்தத் தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர். அதன் பிறகு மூன்று தேர்தல்களில் அதிமுகவும், 2 தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றுள்ளன. திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி வழக்கமாகக் கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கப்படுவதும் வாடிக்கையாக நடந்துள்ளது. ஆனால், கடந்த சில தேர்தல்களில் இந்தத் தொகுதியில் திமுக போட்டியிட்டு வருகிறது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ தென்காசி
⦁ கடையநல்லூர்
⦁ வாசுதேவநல்லூர் (தனி)
⦁ சங்கரன்கோவில் (தனி)
⦁ ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
⦁ ராஜபாளையம்

தென்காசி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,16,183

⦁ ஆண் வாக்காளர்கள்: 7,42,158
⦁ பெண் வாக்காளர்கள்: 7,73,822
⦁ மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 203

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் 2-ம் இடம் பிடித்தவர்

1957
எம்.சங்கரபாண்டியன் , காங் என்.சண்முகம், சிபிஐ

1962
எம்.பி.சாமி ,காங் முருகானந்தம் ,சிபிஐ

1967
ஆர்.எஸ்.ஆறுமுகம், காங் வேலு ,சுதந்திரா கட்சி

1971
செல்லச்சாமி ,காங் ஆர்.எஸ்.ஆறுமுகம் ஸ்தாபன காங்கிரஸ்

1977
எம். அருணாச்சலம், காங் எஸ்.ராஜகோபாலன் ஸ்தாபன காங்கிரஸ்
1980 எம்.அருணாச்சலம் ,காங் எஸ்.ராஜகோபாலன், ஜனதா கட்சி

1984
எம்.அருணாச்சலம் ,காங் ஆர்.கிருஷ்ணன் , சிபிஐ

1991

எம்.அருணாச்சலம் ,காங்
ஆர்.கிருஷ்ணன் , சிபிஐ

1996
எம்.அருணாச்சலம் , தமாகா வி.செல்வராஜ் ,காங்

1998
எஸ்.முருகேசன் ,அதிமுக எம்.அருணாச்சலம், தமாகா

1999
எஸ்.முருகேசன், அதிமுக எஸ்.ஆறுமுகம் ,பாஜக
2004 எம்.அப்பாதுரை, சிபிஐ எஸ்.முருகேசன் ,அதிமுக

2009

பி.லிங்கம் ,சிபிஐ
கே.வெள்ளப்பாண்டி, காங்கிரஸ்

2014
வசந்தி முருகேசன், அதிமுக க.கிருஷ்ணசாமி ,புதிய தமிழகம்

2019
தனுஷ் எம்.குமார், திமுக க.கிருஷ்ணசாமி ,அதிமுக

2019-ம் ஆண்டு தென்காசி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு தென்காசி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in