Published : 09 Apr 2024 05:52 PM
Last Updated : 09 Apr 2024 05:52 PM

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

"வானம் பார்த்த பூமி" என்று அறியப்படும் ராமநாதபுரம் தொகுதி, 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஏர்வாடி தர்கா, ராமேஸ்வரம், இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலமான பாம்பன் பாலம் எனப் பல முக்கிய இடங்களைக் கொண்டுள்ளது ராமநாதபுரம் தொகுதி. இத்தொகுதி கடலோரப்பகுதியை அதிகளவில் கொண்டுள்ளது. இதனால், மீன்பிடித் தொழில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

மண்டபம் மீன்பிடித் துறைமுகம் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கிறது. இருப்பினும், ராமநாதபுரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது பல ஆண்டுகள் தொடரும் பிரச்சினையாக உள்ளது. இவற்றைத் தவிர பரமக்குடியில் நெசவுத்தொழிலும் ஓரளவு பிரபலம்.இந்தத் தொகுதியில் நிலவும் வறண்ட நிலை காரணமாகக் குடிநீர் பிரச்சினை தீர்க்க முடியாத அவலமாக உள்ளது. இதனால், பலர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்வதும் இத்தொகுதியில் வாடிக்கை.

ராமநாதபுரம் மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழியும், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கியும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி.1980-ம் ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் பாரம்பரியமாகப் போட்டியிட்டு வென்ற இந்தத் தொகுதியில் அதன் பிறகு அதிமுக, திமுக இடையே தான் நேரடி போட்டி நிலவியுள்ளது. ஓரிரு முறை கூட்டணி பலத்துடன் காங்கிரஸும், தமாகாவும் வென்றுள்ளன. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்தியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் இத்தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ ராமநாதபுரம்
⦁ முதுகுளத்தூர்
⦁ பரமக்குடி (தனி)
⦁ திருவாடனை
⦁ அறந்தாங்கி
⦁ திருச்சுழி

ராமநாதபுரம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 16,06,014

⦁ ஆண் வாக்காளர்கள்: 7,96,989
⦁ பெண் வாக்காளர்கள்: 8,08,942
⦁ மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 83

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

ஆண்டு வெற்றி பெற்றவர் 2-ம் இடம் பிடித்தவர்
1980 சத்தியேந்திரன், திமுக அன்பழகன், ஏடிகே

1984
ராஜேஸ்வரன், காங்கிரஸ்
சத்தியேந்திரன், திமுக

1989
ராஜேஸ்வரன், காங்கிரஸ் சுப.தங்கவேலன், திமுக

1991
ராஜேஸ்வரன், காங்கிரஸ் கலந்தர் பாட்சா, திமுக
1996 உடையப்பன், தமாகா ராஜேஸ்வரன், காங்கிரஸ்

1998
சத்தியமூர்த்தி, அதிமுக உடையப்பன், தமாகா

1999
மலைச்சாமி, அதிமுக பவானி ராஜேந்திரன், திமுக

2004
பவானி ராஜேந்திரன், திமுக முருகேசன், அதிமுக

2009
ரித்தீஷ், திமுக சத்தியமூர்த்தி, அதிமுக
2014 அன்வர் ராஜா, அதிமுக முகமது ஜலீல், திமுக

2019
நவாஸ் கனி, இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
நயினார் நாகேந்திரன், பாஜக



2019-ம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x