Published : 08 Apr 2024 07:33 PM
Last Updated : 08 Apr 2024 07:33 PM

நீலகிரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

’மலைகளின் அரசி’ என்று அழைக்கப்படும் உதகமண்டலத்தைக் கொண்டது நீலகிரி மக்களவைத் தொகுதி. இதில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்டவை. மேட்டுப்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலும், அவினாசி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன. நீலகிரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை, மலைப் பகுதியைச் சேர்ந்த தொகுதிகளும் சமவெளிப் பகுதிகளைச் சேர்ந்த தொகுதிகளும் வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம். விவசாயிகளில் 50% பேர் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மலை காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு சிறு, குறு விவசாயிகளும் இங்கு உள்ளனர். இளைஞர்களில் 80% பேர் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில்தான் பணியாற்றி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இருப்பினும், தற்போது, போதிய நீர்ப் பாசன வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தவிர, இப்பகுதிகளில் சாயப் பட்டறைத் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். அவினாசி தொகுதியில் நெசவுத் தொழிலும் அதிகமாக செய்யப்படுகிறது.

ஒரு சுவாரஸ்யம்: நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ளூர் வேட்பாளர்களைக் காட்டிலும் வெளியூர் வேட்பாளர்களே அதிகமுறை வென்றுள்ளனர். நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று தொகுதிகள் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய சமவெளி மாவட்டங்களைச் சேர்ந்தவை. இந்த மூன்று தொகுதிகளில் 60% வாக்காளர்கள் உள்ளனர். வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகச் சமவெளிப் பகுதி இருப்பதால், வெளியூர் வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். வெற்றி வாய்ப்பும் அவர்களுக்கே கிடைக்கிறது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

  • உதகை
  • குன்னூர்
  • கூடலூர்(தனி)
  • மேட்டுப்பாளையம்
  • அவினாசி
  • பவானிசாகர் (தனி)

நீலகிரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,18,915

ஆண் வாக்காளர்கள்: 6,83,021
பெண் வாக்காளர்கள்: 7,35,797
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:97

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்


ஆண்டு
வெற்றி பெற்றவர் 2-ம் இடம் பிடித்தவர்
1971 ஜெ. மாதே கவுடர், திமுக அக்கம்மா தேவி, இந்திய தேசிய காங்கிரஸ்

1977
ராமலிங்கம் P. S., அதிமுக க நஞ்சே கவுடர் M. K., இந்திய தேசிய காங்கிரஸ்

1980
பிரபு. R, காங்கிரஸ் திப்பியா T.T.S., ஜனதா கட்சி
1984
பிரபு. R, காங்கிரஸ்
C. T. தண்டபாணி, திமுக

1989

பிரபு. R, காங்கிரஸ்
S. A. மகாலிங்கம், திமுக

1991
பிரபு. R, காங்கிரஸ் S. துரைசாமி, திமுக

1996

எஸ். ஆர். பாலசுப்ரமணியன், காங்கிரஸ்
பிரபு. R, காங்கிரஸ்
1998 M. மாஸ்டர் மதன், பாஜக S. R. பாலசுப்ரமணியன், தமாகா

1999
M. மாஸ்டர் மதன், பாஜக பிரபு. R, காங்கிரஸ்

2004

பிரபு. R, காங்கிரஸ்
M. மாஸ்டர் மதன், பாஜக

2009
ஆ. ராசா, திமுக C. கிருஷ்ணன், மதிமுக

2014
C. கோபாலகிருஷ்ணன், அதிமுக ஆ. ராசா, திமுக

2019
ஆ. ராசா, திமுக தியாகராஜன். M, அதிமுக


நீலகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம்தான் அதிகம். ஏழு முறை அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. 1967-ல் சுதந்திரா கட்சி, 1971 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் திமுக, 1977, 2014 ஆகிய ஆண்டுகளில் அதிமுக வென்றிருக்கின்றன. இரு முறை பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் ஆர்.பிரபு ஐந்து முறை வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். திமுகவின் ஆ.ராசா மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். பாஜகவின் மாஸ்டர் மாதனும் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்.

2019-ம் ஆண்டு நீலகிரி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு நீலகிரி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x