திருச்சி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024
தமிழகத்தின் மையப்பகுதி நகரம் திருச்சி. திருச்சி மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுடன், புதுக்கோட்டை, கந்தவர்கோட்டை தொகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது திருச்சி மக்களவைத் தொகுதி. முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் போட்டியிட்டு வென்ற தொகுதி. அவர் மட்டுமின்றி பல கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் வென்ற தொகுதி. காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ் நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தொகுதி இது.
பாஜகவில் சேர்ந்து மத்திய அமைச்சரான ரங்கராஜன் குமாரமங்கலம் இரண்டு முறை இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பெருமளவு நகர் புறப்பகுதிகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் ’பாரத மிகுமின் நிறுவனம்’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. தொழிலாளர்கள் கணிசமாக உள்ள தொகுதி என்பதால் நீண்டகாலமாகவே இடதுசாரி கட்சிகள் இங்குப் போட்டியிட்டு வென்றுள்ளன.
திராவிடக் கட்சிகள் மட்டுமின்றி தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, சிபிஎம் ஆகியவற்றுக்கும் சற்று வாக்கு வங்கி உள்ள தொகுதி இது. இதனால் பல தேர்தல்களில் இந்தத் தொகுதி கூட்டணியில் உள்ள தேசியக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
• திருச்சி மேற்கு
• திருச்சி கிழக்கு
• ஸ்ரீரங்கம்
• திருவெறும்பூர்
• புதுக்கோட்டை
• கந்தர்வக்கோட்டை
திருச்சி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,44,742
• ஆண் வாக்காளர்கள்: 7,52,953
• பெண் வாக்காளர்கள்: 7,91,548
• மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 241
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:
ஆண்டு | வெற்றி பெற்றவர் | 2-ம் இடம் பிடித்தவர் |
| 1971 | கல்யாணசுந்தரம், சிபிஐ | தங்கவேலு, காங்கிரஸ் |
| 1977 | கல்யாணசுந்தரம், சிபிஐ | வெங்கடேச தீட்சிதர், காங்கிரஸ் |
1980 | செல்வராசு, திமுக | டி.கே.ரங்கராஜன், சிபிஎம் |
1984 | அடைக்கலராஜ், காங்கிரஸ் | செல்வராசு, திமுக |
1989 | அடைக்கலராஜ், காங்கிரஸ் | டி.கே ரங்கராஜன், சிபிஎம் |
| 1991 | அடைக்கலராஜ், காங்கிரஸ் | டி.கே ரங்கராஜன், சிபிஎம் |
1996 | அடைக்கலராஜ், தமாகா | கோபால், காங்கிரஸ் |
| 1998 | ரங்கராஜன் குமாரமங்கலம், பாஜக | அடைக்கலராஜ், தமாகா |
| 2001 | இடைத்தேர்தல் எழில்மலை,அதிமுக | சுகுமாரன் நம்பியார், பாஜக |
2004 | எல்.கணேசன், மதிமுக | பரஞ்சோதி, அதிமுக |
2009 | பி.குமார், அதிமுக | சாருபாலா தொண்டைமான், காங்கிரஸ் |
| 2014 | குமார், அதிமுக | அன்பழகன், திமுக |
| 2019 | சு. திருநாவுக்கரசர், காங்கிரஸ் | DR. V. இளங்கோவன், தேமுதிக |
திருச்சி மக்களவைத் தொகுதில் திமுக ஒரு முறையும், அதிமுக 3 முறையும், மதிமுக ஒரு முறையும், காங்கிரஸ் 4 முறையும், சிபிஐ 2 முறையும் மற்றும் பாஜக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2019-ம் ஆண்டு திருச்சி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2024-ம் ஆண்டு திருச்சி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
