Published : 04 Apr 2024 04:37 PM
Last Updated : 04 Apr 2024 04:37 PM

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி- ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

தமிழகத்தில் கடந்த காலங்களில் காங்கிரஸ் வலிமையாக இருந்த தொகுதிகளில் கிருஷ்ணகிரியும் ஒன்று. கர்நாடக, ஆந்திர எல்லையொட்டிய தொகுதி என்பதால், தமிழ் மொழி பேசும் மக்கள் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களும் கணிசமாக வசிக்கின்றனர். ஆகவே, தேர்தலில் இவர்களின் முடிவும் எதிரொலிக்கும். இதனால், அரசியல் கட்சிகள் அதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது வழக்கம். மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பல முறை போட்டியிட்டு வென்ற தொகுதி இது. இதனால் காங்கிரஸுக்கு செல்வாக்கு உள்ள தொகுதியாக கிருஷ்ணகிரி உள்ளது.

கிருஷ்ணிகிரி, ஒசூர் தொகுதிகளில் அதிகமான தொழிற்சாலைகள் இருப்பதால் தொழிலாளர்களும் கணிசமாக வசிக்கின்றனர். இதுமட்டுமின்றி காய்கறிகள், பூக்கள் என தோட்டப்பயிர்கள் அதிக அளவில் பயிர் செய்யப்படும் பகுதியாகவும் கிருஷ்ணகிரி தொகுதி விளங்கி வருகிறது. ரோஜா பூக்கள் இங்கிருந்து அதிகஅளவில் ஏற்றுமதி ஆகிறது. பெங்களூருக்கு மிக அருகில் இருப்பதால் ஐடி உள்ளிட்ட நிறுவனங்களும் ஒசூரை மையப்படுத்தி தற்போது தளிர்த்து வருகின்றன.

பலமுறை காங்கிரஸ் வென்ற இந்தத் தொகுதியில் சமீபகாலமாக திமுகவும், அதிமுகவும் பலம் காட்டி வருகின்றன. எனினும், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:

⦁ கிருஷ்ணகிரி
⦁ ஒசூர்
⦁ பர்கூர்
⦁ தளி
⦁ ஊத்தங்கரை (தனி)
⦁ வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 16,09,913
ஆண் வாக்காளர்கள்: 8,07,389
பெண் வாக்காளர்கள்: 8,02,219
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 305

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:

ஆண்டு வெற்றி பெற்றவர் 2ம் இடம் பெற்றவர்
1971
தீர்த்தகிரி கவுண்டர், காங்
திருப்பதி, சுதந்திரா கட்சி
1971
இடைத்தேர்தல் சுப்பிரமணியம், காங்
தேசிகன்
1977
பெரியசாமி, அதிமுக
கமலநாதன், திமுக
1980 வாழப்பாடி ராமமூர்த்தி, காங் ராஜகோபால், அதிமுக
1984 வாழப்பாடி ராமமூர்த்தி, காங் சந்திரசேகரன், திமுக
1991 வாழப்பாடி ராமமூர்த்தி, காங் மாணிக்கம், ஜனதாதளம்
1996 நரசிம்மன், தமாகா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்
1998
முனுசாமி, அதிமுக

ராஜராம் பாபு, தமாகா

1999
வெற்றிச்செல்வன், திமுக தம்பிதுரை, அதிமுக

2004

சுகவனம், திமுக

நஞ்சே கவுடு, அதிமுக
2009 சுகவனம், திமுக நஞ்சே கவுடு, அதிமுக
2014 அசோக்குமார், அதிமுக சின்ன பிள்ளப்பா, திமுக
2019 DR. ஏ. செல்லக்குமார், காங்கிரஸ்
கே.பி.முனுசாமி, அதிமுக


2019-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x