

வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி தொகுதியை இணைத்து உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி அரக்கோணம்.பெருமளவு கிராமப்புறங்களைக் கொண்ட இந்தத் தொகுதி ஒரே நீர் ஆதாரம் பாலாறு. இந்த நதி வறண்டு விட்டதால் அங்கு விவசாயம் பொய்த்துவிட்டது. ஒரு சில பகுதிகளில் மட்டுமே மக்கள் விவசாயம் செய்கின்றனர். அதேசமயம், ராணிப்பேட்டை பகுதியில் தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட சில தொழில்கள் மட்டுமே நடைபெறுகின்றன.
இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெருமளவு வேலை வாய்ப்புக்காக, அருகில் உள்ள நகரான சென்னைக்கு தொழிலாளர்களாக செல்கின்றனர். இதனால், தொழிலுக்காக தினந்தோறும் சென்னைக்கு பயணம் செய்வது இப்பகுதி மக்களின் வாழ்வில் அங்கமாகி விட்டது. கல்வி, வேலைவாய்ப்புக்காக இவர்கள் சென்னையையே சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
⦁ அரக்கோணம் (எஸ்சி)
⦁ சோளிங்கர்
⦁ திருத்தணி
⦁ ஆற்காடு
⦁ ராணிப்பேட்டை
⦁ காட்பாடி
அரக்கோணம் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,53,989
ஆண் வாக்காளர்கள்: 7,56,194
பெண் வாக்காளர்கள்: 7,97,632
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:163
முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்:
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | 2ம் இடம் பெற்றவர் |
| 1977 | அழகேசன், காங் | வீரமணி, திமுக |
| 1980 | வேலு, காங் | ரகுநாதன், அதிமுக |
1984 | ஜீவரத்தினம், காங் | புலவர் கோவிந்தன், திமுக |
| 1989 | ஜீவரத்தினம், காங் | மூர்த்தி, திமுக |
| 1991 | ஜீவரத்தினம், காங் | கன்னையன், திமுக |
1996 | வேலு, தமாகா | ரவிராம், காங் |
| 1998 | கோபால், அதிமுக | வேலு, தமாகா |
| 1999 | ஜெகத்ரட்சகன், திமுக | கே.வி.தங்கபாலு, காங் |
| 2004 | வேலு, பாமக | சண்முகம், அதிமுக |
| 2009 | ஜெகத்ரட்சகன், திமுக | வேலு, பாமக |
| 2014 | ஹரி, அதிமுக | இளங்கோ, திமுக |
| 2019 | ஜெகத்ரட்சகன், திமுக | ஏ.கே.மூர்த்தி, பாமக |
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 3 முறையும், அதிமுக 2 முறையும், பாமக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2019-ம் ஆண்டு அரக்கோணம் மக்களவைத் தேர்தலின் நிலவரம்:
2024-ம் ஆண்டு அரக்கோணம் மக்களவைத் தொகுதி போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்: