இது தேர்தல்களின் ஆண்டு!

இது தேர்தல்களின் ஆண்டு!
Updated on
1 min read

2024-ஐத் ‘தேர்தல்களின் ஆண்டு’ என்றே கூறலாம். இந்த ஆண்டில் உலகில் 50 நாடுகளாவது பொதுத் தேர்தலைச் சந்திக்கின்றன; உலக மக்கள்தொகையில் 60% பேர் வாக்களிக்க உள்ளனர். ஜனவரியில் பூடான், வங்கதேசம், தைவான், பின்லாந்து ஆகிய நாடுகளிலும், பிப்ரவரியில் பாகிஸ்தான், இந்தோனேசியா, கம்போடியா ஆகிய நாடுகளிலும், மார்ச்சில் ரஷ்யா, ஈரான், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் தேர்தல் முடிந்துவிட்டது.

இந்தியாவில் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. மே-செப்டம்பர் இடையே தென் ஆப்ரிக்கா, மெக்சிகோ, ஆஸ்திரியா, ருவாண்டா, மங்கோலியா, லிதுவேனியா, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தேர்தலைச் சந்திக்கின்றன.

செப்டம்பர்-அக்டோபர் இடையே இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர்-டிசம்பரில் உருகுவே, ஜோர்டான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவில், நவம்பர் 5 அன்று அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

கரீபியப் பகுதியில் உள்ள ஹைதி தீவு நாட்டில் 2019இல் திட்டமிடப்பட்ட தேர்தல், இந்த ஆண்டாவது நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. உள்நாட்டுக் கலவரங்கள் காரணமாக அங்கு தேர்தல் பல முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் ஜனவரி, 2025இல் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடக்க வேண்டும். எனினும், தற்போதைய பிரதமர் ரிஷி சுனக், அதற்கு முன் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பிரிட்டனில் இந்த ஆண்டே தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in