Published : 29 Oct 2023 07:13 AM
Last Updated : 29 Oct 2023 07:13 AM
தமிழ்ப் பெண் படைப்பாளுமைகளில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். நாவல், சிறுகதை, பெண்ணியத் திறனாய்வு, வாழ்க்கை வரலாற்று நூல்கள் என பல்வேறு இலக்கிய வகைமைகளில் சமூக விழிப்புணர்வோடும் மனிதர்கள் மீதான கரிசனத்தோடும் தன் படைப்புகளை உருவாக்கியவர். 1950களில் தன் எழுத்துப் பயணத்தினைத் தொடங்கி, 2014 வரை தொடர்ந்து சமூகம் சார்ந்த சிந்தனையோடும், பெண் குறித்த அக்கறையோடும் எழுதியவர் ராஜம் கிருஷ்ணன்.
விளிம்பு நிலை மக்களின் கதைகள்: பெண்களுக்குக் கல்வி கிடைப்பது அரிதான காலச் சூழலில்தனக்குக் கிடைத்த கல்வியை இச்சமூகஏற்றத்தாழ்வுகளைக் களைய ஆயுதமாகப் பயன்படுத்தியவர். பெண் எழுத்து என்பது குடும்பம், குடும்ப அமைப்புக்குள் நிகழும்சிக்கல்கள் ஆகியவற்றையே மையமிட்டிருக்கும் என்கிற பொதுப்புத்தியைத் தன் படைப்புகளினால் தகர்த்தவர் ராஜம் கிருஷ்ணன். தான் எடுத்துக்கொண்ட கதைக்கருவைக் கற்பனை கொண்டு இட்டுநிரப்பாமல், அந்தக் கதைக்களனுக்கே சென்று அங்குள்ள மக்களோடு மக்களாக வாழ்ந்து, ரத்தமும் சதையுமாக அவர்களின் வலியை வாசகர்களுக்குக் கடத்திய பெருமை தமிழ்ப் படைப்புலகில் இவருக்கு உரியது. இவரது ‘கரிப்பு மணிகள்’ நாவல் தூத்துக்குடிக்குச் சென்று அங்குள்ள உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை இவ்விதம் யதார்த்தமாகப் பார்த்துச் சித்தரித்ததே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT