Published : 18 Sep 2023 06:13 AM
Last Updated : 18 Sep 2023 06:13 AM
கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன், பெண்கள் அமைப்பின் அகில இந்திய மாநாடு ஒன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அம்மாநாட்டின் பிரதிநிதியாக நான் பங்கேற்றேன். அதன் அமர்வுகளில் ஒன்று, இளம் பெண்களுக்கானது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் இளம் பெண்கள் – குறிப்பாக மாணவிகள் – மாநாட்டுப் பிரதிநிதிகளாகப் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களில் இருவர் பேசிய விஷயங்கள் நினைவில் தங்கிப்போனவை.
ஒருவர் ஒடிஷாவிலிருந்து வந்தவர். அவருடைய தாயார் கர்ப்பம் தரித்ததிலிருந்தே ஒட்டுமொத்தக் குடும்பமும் உறவுகளும் சேர்ந்து அவரது சிறு சிறு அசைவுகளையும் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து, பிறக்கப் போவது ஆண் குழந்தைதான் என்று உறுதியாக நம்பியதுடன் ஆரூடமாகவும் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால், பிறந்ததோ பெண் குழந்தை; பத்து மாத கால அதீத எதிர்பார்ப்பும் விருப்பமும் நம்பிக்கையும் சிதைந்துபோனதில் அனைவரின் வெறுப்புக்கும் அந்தப் பெண் குழந்தை ஆளானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT