Published : 13 Jun 2023 10:01 AM
Last Updated : 13 Jun 2023 10:01 AM
போக்குவரத்து விதிகளை மீறுவதன் இறுதி விளைவு விபத்துதான். சாலைகளில் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களால் அவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் உயிராபத்து ஏற்படுகிறது. இவற்றைப் பற்றித் தெரிந்திருந்தாலும் விதிமீறல்கள் தங்கள் உரிமை என்று நினைப்பவர்களே இங்கு அதிகம். இதில் எல்லாத் தரப்பினரும் அடக்கம். சிவப்பு விளக்கின்போது முன்னால் வாகனங்கள் இருந்தால் மட்டுமே அரசுப் பேருந்து ஒட்டுநர்கள் பலர் சிக்னலில் நிற்கிறார்கள். போக்குவரத்துக் காவலர் இருந்தால் மட்டுமே சிக்னலில் நிற்க வேண்டும் என்பது பிற வாகனஓட்டிகளின் மனநிலையாக இருக்கிறது.
அதிகரிக்கும் ஆபத்துகள்: பிற வாகனங்களை இடப்புறத்திலிருந்து முந்திச் செல்வது, ‘ஒன் வே’, ‘நோ என்ட்ரி’ விதிகளை மீறுவது, அனுமதிக்கப்படாத திசையிலிருந்து வாகனத்தை வேகமாக ஓட்டிவருவது, அனுமதிக்கப்படாத இடங்களில் ‘யூ டர்ன்’ எடுப்பது, மீடியன்களில் இருக்கும் சின்னச் சின்ன இடைவெளிகளில் புகுந்து சாலையின் எதிர்ப்புறத்துக்குச் செல்வது எனப் பிற விதிமீறல்களும் தினமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக கடைகள் நிறைந்த உள்புறச் சாலைகளில் தவறான திசையிலிருந்து வாகனங்களை வேகமாக ஓட்டிவருவதும், ‘இண்டிகேட்டர்’ போடாமல், கை சைகை காட்டாமல் திடீரெனத் திருப்புவதும், வாகனங்களுக்கிடையே புகுந்துவருவதும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது. இதனால் நேராக வரும் வாகனஓட்டிகள் எந்தத் தவறும் செய்யாமலே விபத்துக்குள்ளாகி கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். நவீன வசதிகளும் தொழில்நுட்பமும் அதிகரிப்பதால் சாலைகளின் பயன்பாடும் பாதுகாப்பும் அதிகரிப்பதற்கு மாறாக, விதிமீறல்களின் வகைமைகளும் ஆபத்துகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT