ரஷ்யா - உக்ரைன் போர் இதுவரை

ரஷ்யா - உக்ரைன் போர் இதுவரை
Updated on
2 min read

2022 பிப்ரவரி 24: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மீதான ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’க்கு உத்தரவிட்டார்.

மார்ச்: உக்ரைனின் முக்கிய வேளாண் மையமான கெர்ஸான் பிராந்தியத்தை ரஷ்யா கைப்பற்றியது. ஸாப்போரிஸியா நகரில் அமைந்துள்ள அணு மின்நிலையம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அங்கு நடந்த மோதலில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஐநாவின் கூற்றுப்படி, இந்தக் காலகட்டத்தில் அதிக மக்கள் இறந்தனர்.

ஏப்ரல்: டோன்பாஸ் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. டொனெட்ஸ்க் நகர ரயில் நிலையம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கருங்கடல் பகுதியில் ரஷ்யக் கடற்படையின் அதிநவீன மோஸ்க்வா போர்க் கப்பலை உக்ரைன் மூழ்கடித்தது.

மே: உக்ரைனின் முக்கியத் துறைமுகமாகவும் தொழில் துறை மையமாகவும் திகழ்ந்த மரியுபோல், ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. உக்ரைனிய வீரர்கள் சரணடைந்தனர்; உயிரிழப்புகள் தொடர்ந்தன.

ஜூன்: கருங்கடலில் உள்ள ஒடேசா நகருக்கு அருகிலுள்ள ஒரு தீவை உக்ரைனியப் படைகள் கைப்பற்றின. பிப்ரவரி
யில் ரஷ்யா கைப்பற்றியிருந்த பெரிய துறைமுகம் அது.

ஜூலை: உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான லிசிசான்ஸ்க் நகரை ரஷ்யா கைப்பற்றியது. இதன் மூலம் டோன்பாஸ் பிராந்தியத்தின் லுஹான்ஸ்க், ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், டோன்பாஸ் முழுவதையும் கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

ஆகஸ்ட்: கெர்ஸானில் உக்ரைன் அதிகாரபூர்வமாக எதிர்த் தாக்குதலைத் தொடங்கியது; மேற்கு நாடுகள் வழங்கிய ஆயுத அமைப்புகளை அங்கே நிலைநிறுத்தியது. கிரைமியாவில் உள்ள விமானப் படைத் தளத்தையும் அது தாக்கியது.

செப்டம்பர்: திடீர்த் தாக்குதல் மூலம் வடகிழக்கு கார்கிவ் பகுதியை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியது. மே மாதம் ரஷ்யா கைப்பற்றிய டொனெட்ஸ்க், லைமன் ஆகியவற்றை நோக்கி முன்னேறிய இந்தத் தாக்குதல், தொடர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்தது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸாப்போரிஸியா அணு மின்நிலையம் மூடப்பட்டது.

அக்டோபர்: உக்ரைன் லைமனை மீண்டும் கைப்பற்றியது. கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் கெர்ச் பாலம் அப்போது நிகழ்ந்த குண்டுவீச்சில் சேதமடைந்தது. ரஷ்யாவின் விநியோகச் சங்கிலியின் முக்கியத் திறவுகோலாக அந்தப் பாலம் இருந்தது. குண்டுவீச்சுக் குத் தான் உத்தர விடவில்லை என்று ஸெலென்ஸ்கி கூறினார். சில பகுதி களில் நிலத்தை இழந்தபோதிலும், லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், கெர்ஸான், ஸாப்போரிஸியா ஆகிய பகுதிகளை இணைத்துக்கொள்வதாக ரஷ்யா அறிவித்தது.

நவம்பர்: ரஷ்யத் துருப்புகள் கெர்ஸானில் இருந்து கிழக்குக் கரையான நிப்ரோ நதிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்களைத் தாக்கியதற்காகவும், போர்க்குற்றம் இழைத்ததற்காகவும் ரஷ்யாவைப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட நாடாக ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்தது.

டிசம்பர்: ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ எதிர்பார்த்ததைவிட நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளும் என்பதை உக்ரைன் ஒப்புக்கொண்டது. ரஷ்யாவுக்குள் உள்ள ராணுவத் தளங்களைத் தாக்க உக்ரைன்ட்ரோன்களைப் பயன்படுத்தியது.

2023 ஜனவரி: ரஷ்யத் துருப்புகள் முகாமிட்டிருந்த டொனெட்ஸ்கில் உள்ள கட்டிடத்தை உக்ரைன் தாக்கியது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக/ காயமடைந்ததாக அது கூறியது. ரஷ்யா 89 இறப்புகளை ஒப்புக்கொண்டது. நிப்ரோவில் உள்ள கட்டிடத்தின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் 45 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு பீரங்கிகளை அனுப்புவதாக அறிவித்துள்ளன.

2023 பிப்ரவரி: உக்ரைனுக்குத் திடீர்ப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஸெலென்ஸ்கியைச்சந்தித்தார்; ரூ.4,135 கோடி மதிப்பிலான ஆயுங்கள் வழங்குவதாக உறுதியளித்தார். “ரஷ்யாவின் இருத்தலுக்காகவே உக்ரைன் மீதான போர்” என புடின் பிரகடனம் செய்தார்.

- நிஷா

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in