சுதந்திரச் சுடர்கள் | சட்டம்: திருமணப் பாதுகாப்பு

சுதந்திரச் சுடர்கள் | சட்டம்: திருமணப் பாதுகாப்பு
Updated on
1 min read

தனிப்பட்ட மதச் சட்டங்களுக்கும் சடங்குகளுக்கும் பலிகொடுக்கப்பட்ட பெண்ணுரிமையை மீட்கும் நிகழ்வுகள் இந்தியச் சமூகத்தில் மிக அரிதாகவே நிகழ்கின்றன.

கணவன் ஒரே நேரத்தில் மூன்று முறை ‘தலாக்’ சொல்வதன் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் ‘உடனடி முத்தலாக்’ முறையைத் தடைசெய்யும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2017 இல் வழங்கியது. இதற்குக் காரணம் உத்தராகண்டைச் சேர்ந்த ஷாயரா பானு.

கடிதம் மூலம் ‘முத்தலாக்’ சொல்லி ஷாயரா பானுவை விவாகரத்து செய்திருந்தார் அவருடைய கணவர். உடல்ரீதியான வன்முறைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளான ஷாயரா பானு, பெண்களைச் சிறுமைப்படுத்தும் முத்தலாக் முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

ஷாயரா பானு
ஷாயரா பானு

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படை உரிமைக்கு எதிரானது ‘உடனடி முத்தலாக்’ என்கிற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

அதைத் தொடர்ந்து இஸ்லாமியப் பெண்கள் திருமணப் பாதுகாப்புச் சட்டம், 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ‘உடனடி முத்தலாக்’ நடைமுறை சட்டவிரோதமானது; மீறினால் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in