Published : 12 May 2016 10:56 AM
Last Updated : 12 May 2016 10:56 AM

பாடம் கற்பிப்போம்!

சனிக்கிழமை அன்று வெளியான ‘ஏமாற்று வேலைகளை நிறுத்திக்கொள்ளுங்கள்!’ தலையங்கம் சரியான சாட்டையடி. 2013-லேயே தமிழ்நாட்டில் 7 கோடிக்கும் அதிகமான செல்பேசி இணைப்புகள் இருந்தன. இப்படியிருக்க, தமிழகத்தின் 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்பேசி அளிப்போம் எனும் அறிவிப்பு அர்த்தமற்றது.

அதேபோல், விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்லும் சூழலில் மொபெட் வாங்க 50% மானியம் தருகிறேன் என்று மக்களின் நுகர்வைத் தூண்டிவிடும் அறிவிப்பு ஏன்? ஏழை, எளியவர்களால் எப்படி 50% தொகையைச் செலுத்த முடியும்? மேலும், அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து, நகர்ப்புறங்களில் இரவு 12 மணி வரை நகரப் பேருந்துகளை இயக்கினாலே 2 சக்கர, 4 சக்கர வாகனங்களுக்குத் தேவை குறைந்துவிடும். நாட்டு நலனில் அக்கறை கொண்டு சிந்திக்காத கட்சிகளுக்குத் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

- சடகோபன், காஞ்சிபுரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x