

கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானிடம்’ நாவல் ஆங்கிலத்துக்குச் சென்றிருக்கிறது. ‘hungry humans’ என்ற தலைப்பில் பெங்குயின் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. இதன் மொழிபெயர்ப்பாளர் சுதா ஜி.திலக். இந்த நாவலின் அட்டையில் ‘தமிழ் இலக்கியத்தில் ட்ரான்ஸ்கிரெஸிவ் புனைவைத் தொடங்கிவைத்த முன்னோடி நாவல்’ என்று பொருள்படும் வகையிலான கமல் ஹாஸனின் ஆங்கில வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
நுழைபுலம் 100-வது அமர்வு
நுழைபுலம் இலக்கியக் கூடுகைகளின் நூறாவது அமர்வு இன்று (ஞாயிறு) சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நடைபெறுகிறது. ஆண்டாள் பிரியதர்ஷினி, அமிர்தம் சூர்யா, ச.சுப்பாராவ், பிரியா பாபு, தமிழ் மணவாளன், கோமதி சங்கர், அம்மு ராகவ், சரிதா ஜோ, சர்மிளா தேவி, நல்லு இரா.லிங்கம், பா.சண்முக ஈஸ்வரி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குகொள்கிறார்கள். இந்த நிகழ்வை நுழைபுலம் குழுவும் சுவடு பதிப்பகமும் இணைந்து நடத்துகின்றன. நேரம்: காலை 10 மணி.