Published : 31 May 2016 11:21 AM
Last Updated : 31 May 2016 11:21 AM

வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை

ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும் கண்டனங்களும் கிளம்பியுள்ளன. கடந்த ஆண்டில் ஹெல்மெட் விவகாரத்திலும் தமிழை உயர் நீதிமன்ற மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்காகவும் வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தன. அப்போது வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பார் கவுன்சில் முன்வராத அல்லது இயலாத காரணத்தால், டெல்லியில் உள்ள அகில இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்தது.

பல வழக்கறிஞர்கள் மீது தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞர் தண்டிக்கப்பட்டு சிறையிலும் உள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாநில உயர் நீதிமன்றங்கள் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைப் பெறும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைப் பல கோணங்களில் வழக்கறிஞர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

நீதிமன்றத்தைக் கோயிலாகவும் நீதிபதியைக் கடவுளாகவும் நம்புகின்றனர் மக்கள். அதனால், வழக்கறிஞர் அர்ச்சகர் என்பதில் அய்யமில்லை. நான் அடிக்கடி சொல்வதுண்டு, ‘‘கோயிலுக்கும் விக்கிரகத்துக்கும் மரியாதை கூடக்கூட அர்ச்சகருக்கு வருமானம் அதிகம்” என்று. அதனால், வழக்கறிஞர்கள் பத்தியம் இருப்பதுபோல், ஒரு ஐந்தாண்டுக்கு இந்தப் புதிய சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பார்களேயானால், அவர்களுக்கும் நல்லது.. நீதிமன்றத்துக்கும் நல்லது.. நாட்டு மக்களுக்கும் நல்லது.

- பொ.நடராசன், நீதிபதி (பணி நிறைவு), மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x