Published : 03 Apr 2022 11:24 AM
Last Updated : 03 Apr 2022 11:24 AM
தமிழின் தனித்துவமிக்க படைப்பாளிகளுள் ஒருவர் மா.அரங்கநான். அவருடைய நினைவாக அவர் மகனும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான அரங்க.மகாதேவன் 2018-லிருந்து ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ வழங்கிவருகிறார். 2022-க்கு குடவாயில் பாலசுப்ரமணியனும் ட்ராட்ஸ்கி மருதுவும் இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். ஒரு லட்சம் ரொக்கப் பரிசைக் கொண்டது இந்த விருது. விருது வழங்கும் விழா ஏப்ரல் 16-ல் ராணி சீதை அரங்கில் நடைபெறுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் இந்நிகழ்வில் பங்குகொண்டு விருதுகளை வழங்கவிருக்கிறார். குடவாயில் பாலசுப்ரமணியனுக்கும் ட்ராட்ஸ்கி மருதுவுக்கும் வாழ்த்துகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT