Published : 12 Apr 2016 10:50 AM
Last Updated : 12 Apr 2016 10:50 AM

மாணவர் போராட்டம்

காவல் துறையினர் உதவியுடன் மாணவர் போராட்டங்களை ஒடுக்கும் போக்கு சமீபகாலமாக அதிகரித் துள்ளது. எடுத்துக்காட்டாக, தமிழ் நாட்டில் டாஸ்மாக்குக்கு எதிராக மாணவர்கள் போராட்டம், புணே திரைப்படக் கல்லூரி, டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், சமீபத்தில் ஸ்ரீநகர் என்.ஐ.டி. பல்கலைக்கழகம் என்று பல முன்னணி உயர் கல்வி நிலையங்களில் நடைபெற்ற/ நடந்துகொண்டிருக்கின்ற போராட்டங்களில் மாணவர்கள் ஈவு இரக்கமின்றி வதைக்கப்பட்ட காட்சிகள் இன்னும் மனக்கண்ணில் நிற்கின்றன.

மாணவப் போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னால், அவர்களுடன், பேச்சுவார்த்தை நடத்தி, அவற்றைக் களைய முயற்சி செய்ய வேண்டும். முதல்வர், துணை வேந்தர் போன்ற அதிகாரிகள் எடுத்தவுடனேயே, காவல் துறையை வளாகத்துக்குள் அழைத்து, அச்ச உணர்வை ஏற்படுத்தி வன்முறையினால் நசுக்கிவிடலாம் என்கிற போக்கு, அவர்களின் தவறான அணுகுமுறையைத்தான் காட்டுகிறது. மாணவர்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டோர் பிரச்சினைகளைத் தீர்க்க, மற்ற எல்லா முயற்சிகளையும் எடுத்து தோல்வி அடைந்த பின்னரே, வேறு வழியின்றி காவல் துறையினரின் உதவியை நாடுவர்.

இன்றைய வியாபாரக் கல்விச் சூழலில், மாணவர்களை அடிமைகளாக நடத்துவதும், பந்தாடுவதும் தங்கு தடையின்றி நடக்கின்றன. எவ்வளவு சீக்கிரம் இந்த அநியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறோமோ அவ்வளவு நல்லது.

- தா.சாமுவேல் லாரன்ஸ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x