Published : 07 Dec 2015 10:06 AM
Last Updated : 07 Dec 2015 10:06 AM

களத்தில் தி இந்து: உதவும் கரங்களுடன் இணைந்த பெங்களூர் தமிழ் பெண்கள்

உதவும் கரங்கள் ஒன்றுசேர்கின்றன!



*

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மக்களுக்கு தமிழகமெங்கும் இருந்து ‘தி இந்து’ வாசகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் அருகே அரியூர் நாராயணி பீடம் சார்பில் 500 சேலை மற்றும் 500 பிஸ்கட் பாக்கெட்டுகளை பீடத்தின் இயக்குநரும் அறங்காவலருமான சுரேஷ்பாபு அனுப்பியுள்ளார். வேலூர் எல்ஐசி ஏஜென்ட் கண்ணன் 20 பாய், சாய் பில்ட்ர்ஸ் சார்பில் 25 ஸ்டவ், வி.எஸ்.கீதா என்பவர் ஒரு பெட்டியில் துணி மற்றும் பேஸ்ட், நாப்கின், பிஸ்கட், மாத்திரைகள், ஓஆர்எஸ் பவுடர்கள் மற்றும் பொருட்கள் கொடுத்துள்ளனர்.

திருச்சி:

எம்.ஏ.எம். கல்லூரி, எம்ஐஐடி, பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்கள், லட்சுமி டைமன்ட், முரளிதரன், விஜயகுமார்,  பாரதி ஆகியோர் போர்வைகள் அனுப்பியுள்ளனர். முகமது, பால்ராஜ், அனுஜா, திருச்சி பாய்ஸ், பிரதீப் ஆகியோர் பிஸ்கட் பெட்டிகளை அனுப்பியுள்ளனர். டாக்டர் மெரினா கிளமென்ட் மற்றும் கே. ஜீவானந்தன் தலா 2 பெட்டி மருந்துகள் அனுப்பியுள்ளனர். புருஷோத்தமன் அரிசி அனுப்பியுள்ளார். குளித்தலை மக்களுடன் இணைந்து ஸ்ரீனிவாசா கபே ஓட்டல் நிர்வாகத்தினர் 88 மூட்டை அரிசி வழங்கியுள்ளனர்.

சுழியம் தன்னார்வ அமைப்பினர் 17 பெட்டிகளில் உணவு, ஆடைகள், 51 பெட்டிகளில் குடிநீர் பாட்டில்கள், 9 பெட்டிகளில் மருந்து, பெட்ஷீட் அனுப்பியுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த தினகரன், ரவீந்திரன், முரண், ராஜா, ஸ்ரீனிவாசன், சித்தார்த், ராஜேஷ், சுப்பிரமணியன், உமாமகேஷ்வரி, இளையராஜா ஆகியோர் தனித்தனியாக உணவு, உடைகள், மளிகை பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் அடங்கிய ஏராளமான பெட்டிகளை வழங்கியுள்ளனர். மருந்து, மாத்திரைகள், பெட்ஷீட், பிஸ்கட் அடங்கிய 13 பெட்டிகளை விஷ்மா என்பவர் அளித்துள்ளார். இதேபோல ஜெயக்குமார், தர்ஷினி, பராசக்தி பாலு, சந்தோஷ், பரிமளா ராமானுஜம், நிகில்ராஜ், நிதி, ரமேஷ் ஆகியோர் பெட்டி பெட்டியாக பிஸ்கட், ஆடைகள், மருந்து பொருட்கள் அளித்துள்ளனர். பெண்கள் தன்னார்வ அமைப்பு சார்பில் ராஜநாராயணன் என்பவர் 16 பெட்டிகளில் ஆடைகள், குடிநீர் பாட்டில்கள், நாப்கின், பிஸ்கட் உள்ளிட்டவற்றை அளித்துள்ளார். மரியா என்பவர் 12 பெட்டிகளில் பிஸ்கட், குடிநீர் பாட்டில்களை அளித்துள்ளார்.

திருச்சி சமயபுரத்திலுள்ள டிஆர்பி பொறியியல் கல்லூரி மூன்றாமாண்டு மாணவ, மாணவிகள் 63 பெட்டிகளில் பிஸ்கட், ஆடைகள், நாப்கின், பால்பவுடர் உள்பட பல்வேறு வகையான பொருட்களை அளித்துள்ளனர். கணேஷ் நிமலாவேணி என்பவர் ஒரு பண்டல் பெட்ஷீட் வழங்கியுள்ளார். சுதாகர் என்பவர் 20 பெட்டிகளில் குடிநீர் பாட்டில்கள், 7 பெட்டிகளில் மருந்து மற்றும் உணவு பொருட்கள், ஒரு பெட்டியில் பெட்ஷீட் வழங்கியுள்ளார். ராஜேஷ், ஆனந்த், தனம், நிர்மலா, கமலாசுந்தர்ராஜ், சிவா, தர்ஷினி நாராயணன், கண்ணன் ஆகியோர் கொசுவர்த்தி சுருள், மருந்துகள், குடிநீர் பாட்டில்கள், பால் பவுடர், ஆடைகள் போன்றவற்றை பெட்டி பெட்டியாக வழங்கியுள்ளனர்.

நாகப்பட்டினம்:

சங்கரன்பந்தல், குத்தாலம் பகுதி இஸ்லாமிய இளைஞர்கள் 50 கிலோ அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கியுள் ளனர்.

தஞ்சாவூர்:

சிவில் இன்ஜினியர்ஸ் மற்றும் ஆர்கிடெக் சங்கத்தின் தஞ்சை கிளை சார்பில் ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ அரிசி, 100 பாய், 150 போர்வைகள், 150 கைலிகள், 161 சேலைகள், 19 ஸ்டவ், தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளிகளான கூட்டுறவு காலனி, கரந்தை, வண்டிக்காரத்தெரு, வடக்குவாசல், ராஜப்பா நகர் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களி்ன் சேமிப்பு நிதியான ரூ. 15 ஆயிரம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

கரூர்:

கரூர் தாந்தோணிமலை இந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி சார்பில் 100 கிலோ அரிசி, போர்வை, தண்ணீர் பாட்டில், பிஸ்கட், சமையல் பொருட்கள், ஆடைகள் என 70 பெட்டிகள் அளிக்கப்பட்டுள்ளன. முசிறியை சேர்ந்த ஜெ.சத்யநாராயணன், பி.கிரி அண்ட் கே.ஆனந்தன், அமலரூபன், மதுரையை சேர்ந்த முருகபூபதி, சி.அமர்நாத், கோவை நவீன்ராஜ், ராஜபாளையம்கோமதிசங்கர் ஆகியோர் தலா 35 பாய்கள் அளித்தனர். சென்னை வேளச்சேரியை சேர்ந்த டி.சுமதி, தர், சுகுணா,கலையரசி, சசிஆனந்தி, ஜெயலட்சுமி, சங்கீதா, தாரணி, ரேணுகா, இமயா, கலைவாணி, லீலாவதிஆகியோர் இணைந்து ரூ.32,000 மதிப்புள்ள 235 போர்வைகள் அளித்தனர். கரூர் ரெங்கநாதம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பி.எல்.எஸ்.ஸ்டெப்பி, பல்லவி, தெரசா ஏஞ்சல்மேரி, அருணா, தேன்மொழி, கே.விஜயா, சாந்தி, தனலட்சுமி ஆகியோர் இணைந்து 30 கம்பளி, உணவு பெட்டிகளை அளித்தனர். கரூர் ராமகிருஷ்ணபுரம் செந்தில்குமார் 50 போர்வைகள் அளித்தார்.

தேனி:

அர்விந்த் கண் மருத்துவமனை, தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பிச்சம்பட்டி கிராம மக்கள், பிஎஸ்என்எல் பணியாளர்கள், தெப்பக்குளம் உப கோட்ட மின்வாரிய ஊழியர்கள், கோ ஆபரேட்டிவ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம், ராஜபாளையம்  விஷ்ணுசங்கர் மில் தொழிலாளர்கள், மருத்துவர்.ரத்தினகுமார்,கார்த்திகேயன், மீனாட்சி, சண்முக வெங்கடேசன், பாலா, பிரியங்கா, கணேசன், ரமேஷ், ஹரிவிஷ்ணுராம், ஆனந்தன், பாலகிருஷ்ணன், பிரதோஷிமா, தினேஷ்பாபு, இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர்கள், மனோஜ், விஸ்தா டெலி சர்வீஸ், சம்பத்குமார் ஆகியோர் போர்வை, பாய், மருந்துப் பொருட்கள், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, தார்ப்பாய்கள், ஸ்டவ், புதுத்துணிகள், பிஸ்கட், பால்பவுடர் உள்ளிட்ட உணவுப்பொருட்கள்.

சேலம்:

சேலத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அரிசி, உணவு பொட்டலங்கள், மளிகை, போர்வை, நாப்கின், பிஸ்கட், மருந்து பொருட்கள், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட அத்தியாவசிய தேவை பொருட்கள் ஒரு லோடு வரை அனுப்பி வைத்துள்ளனர்.

தருமபுரி:

தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை பகுதியில் உள்ள அப்புசமுத்திரம்(தேவரசம்பட்டி) கிராமத்தின் அரசு தொடக்கப் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் 10 போர்வை, 10 பாய், 1 மூட்டை அரிசி(25கிலோ) ஆகிய பொருட்களை அனுப்பியுள்ளனர். தருமபுரி காந்திநகரைச் சேர்ந்த சுந்தர பாண்டியன், 15 பேண்ட்-சர்ட், 30 புடவைகளை அனுப்பி வைத்துள்ளார். காந்தி நகரைச் சேர்ந்த முத்தம்மாள் 10 போர்வை அனுப்பியுள்ளார். தருமபுரி அடுத்த நல்லம்பள்ளி ரவிக்குமார் 4 பாய், 4 போர்வை, 2 ஸ்டவ் ஆகியவற்றை அனுப்பியுள்ளார். தருமபுரி பாரதிபுரம் பச்சியம்மன் அச்சகம் சார்பில் 7 பாய் அனுப்பி வைத்துள்ளனர்.

நாமக்கல்:

குழந்தை மோட்டார்ஸ் நிறுவனம், நாமக்கல் சார்பில் 25 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி:

மத்தூர் அருகே அத்திகானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் கடலூருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள், புதிய ஆடைகளை அனுப்பி வைத்தனர்.

நாகரசம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பாக ஆசிரியர்கள், மாணவர்கள் 40 போர்வை கள், 3 பெட்டி பிஸ்கட் பாக்கெட்கள் அனுப் பினர்.

கிருஷ்ணகிரி வகாப் நகரைச் சேர்ந்த நண்பர்கள் சரவணமூர்த்தி, தினேஷ்குமார், வேலு ஆகியோர் ரூ-.6990 மதிப்பில் 10 பாய்கள், 10 ஸ்ட்வ்கள், 10 போர்வைகள் மற்றும் 400 பாக்கெட் பிஸ்கெட்களை வழங்கினார்.

ஓசூர் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி ஊழியர்கள் மற்றும் நண்பர்கள், குடும்பத்தினர் சார்பில் 50 ஸ்டவ்கள், 250 கிலோ அரிசி, 110 போர்வைகள், 100 பாய்கள் அனுப்பி உள்ளனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூர் ஜோஸ் நர்சரி பள்ளியில் பயிலும் 380 மாணவர், மாணவியர் 25 பாய், 50 போர்வைகள் மற்றும் பற்பசை, சோப்பு உள்ளிட்ட பொருள்களை திருநெல்வேலி கேபிஎன் நிறுவனத்தில் அளித்துள்ளனர். குறிப்பாக கேஜி வகுப்பு மாணவர்கள் பற்பசை, சோப்புகளை நேரடியாகவே கொடுத்திருந்தனர்.

திருநெல்வேலி:

திருநெல்வேலி தச்சநல்லூர் சுருதி 20 போர்வைகள், என்.ஜி.ஓ. பி காலனி ராஜேந்திரன் 20 போர்வைகள், தச்சநல்லூர் சங்கர் 1 பெட்டி பிஸ்கட், வெங்கடேஸ்வரன் 2 பெட்டி தண்ணீர் பாட்டில்கள், பாளையங்கோட்டை கோபாலகிருஷ்ணன் பிஸ்கட் பாக்கெட்டுகள்,போர்வைகள் அடங்கிய பெட்டி, சீதபற்பநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி சார்பில் 730 பாக்கெட் பால்பவுடர், திருநெல்வேலி டிவிஎஸ் சுந்தரம் நிறுவனம் 12 பெட்டி பிஸ்கெட், என்.ஜி.ஓ. பி காலனி பாலசுப்பிரமணியன் 2 பெட்டி துணிமணிகள், தச்சநல்லூர் ராஜு பால் பவுடர், ரஸ்க் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் 11 பெட்டிகள், பெருமாள்புரம் பார்வதி 2 பெட்டி பிஸ்கெட் பாக்கெட்டுகள், திருநெல்வேலி டவுன் திருமலை வடிவு 1 ஸ்டவ், செல்வஷ்ரி கணபதி 2 அட்டைப்பெட்டி பிஸ்கெட் பாக்கெட்டுகள், நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் துணிமணிகள் அடங்கிய 5 பண்டல்கள், திருநெல்வேலி செல்வின் ராஜ்குமார் 50 போர்வைகள், 51 பாய்கள், வேல் மெடிக்கல்ஸ் சார்பில் 60 பாட்டில் இருமல் மருந்துகள், 25 கிலோ அரிசு மற்றும் உணவுப் பொருள்கள், மகேந்திரா பைனான்ஸ் சார்பில் 3 பெட்டி துணிமணிகள், பெருமாள்புரம் டாக்டர் எஸ். ராமச்சந்திரன் 100 பாய்கள், 100 போர்வைகளை வழங்கியுள்ளனர்.

கோவை:

ஆனந்த், கதிர், தனிகாச்சலம், சஞ்சய்காந்தி, சந்தோஷ், கிருஷ்ணன், ஜி.எச்.வெஜிடபுள் கட, கே.பி.ஆர். மில் தொழிலாளர்கள், சர்வம் கல்வி அறக்கட்டளை, காருண்யா குழு, முத்துக்குமார், கிரண் என்.ராகுல், பெர்பக்ட் டூல் அன்ட் டை, மாரிமுத்து, மணி, வாரி இன்ப்ராஸ்ட்ரக்சர், சிறுமுகை எஸ்.ஐ.வி. 96 பேட்ஜ், கிருஷ்ணன் இந்தியா அன்ட் சவுண்ட், ராமலிங்கம், சுவாமிநாதன், பிரவீண் அன்ட் தீனா, விகாஸ், ஆர்.கீதா, சங்கரி, ஐ.எஃப்.ஜி.டி.பி. குரூப் ஏ பிரிவு அலுவலர்கள், இளங்கோ நவநீத கிருஷ்ணன், சோமசுந்தரம், சுந்தரம், அர்ஜூன், பாய்ண்ட் சேல்ஸ், ராம்கோபால், ராஜேந்திரன், ஜெம் டெக் இன்ஜினியரிங், வசந்தி, ஈஸ்வரா சுப்ரமணியம், ஹரிதாஸ், விவேகா பில்டர்ஸ் சார்பில் ஏராளமான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருப்பூர்:

முருங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு மற்றும் வரதராஜபுரம் கிராம மக்கள்- 20 பாய்கள், 10 போர்வைகள், உடுமலை தனியார் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியர் தம்பதியினர் சாந்தாமணி- ஸ்ரீகாந்த்- 6 போர்வைகள், ரங்கநாத் 12 ஸ்டவ்கள், சடையபாளையம் கிராம மக்கள் 7 ஸ்டவ்கள், வசந்தராஜ் அரிசி 25 கிலோ, பருப்பு, பிஸ்கெட் தலா ஒரு பெட்டிகள், ராதாகிருஷ்ணன் 5 டி.சர்ட் கொடுத்துள்ளனர்.

உதவும் கரங்களுடன் இணைந்த பெங்களூர் தமிழ் பெண்கள்

கடலூர் மாவட்டத்தின் தேவைகள் குறித்த கேட்டறிந்த 12 மணி நேரத்தில் ‘பெங்களூர் பிரிகேட் மெட்ரோபோலீஸ் தமிழ் பெண்கள் இயக்கம்’ சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், நாப்கின், பால்பவுடர், டார்ச் லைட், பேட்டரீஸ், மெழுகுவர்த்தி, தார்பாய், குழந்தைகளுக்கான உணவு, பிஸ்கட்ஸ், பால் பாக்கெட், பிரட், பன், சர்க்கரை,மசாலா பாக்கெட்டுகள், கொசுவத்திச் சுருள், பல்பொடி, நூடுல்ஸ், தண்ணீர்பாட்டில்கள், மோர் உள்ளிட்டப் பொருட்களை அவர்களே ஒரு ட்ரக்கில் அனுப்பிவைத்தனர்.

மன்றாடியார் உதவி

காங்கயம் தொகுதியின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரான ராஜ் குமார் மன்றாடியார் தனது சொந்த செலவில், ரூ.1 லட்சம் மதிப்பிலான, 500 போர்வைகளை காங்கயத்திலிருந்து சென்னைக்கு அனுப் பினார். இது குறித்து ராஜ்குமார் மன்றாடியார் மேலும் கூறும்போது, “சென்னை நெற்குன்றம் தங்கம் பெருமாள் பிள்ளைத் தெருவில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சுமார் 100 பேர் தங்குவதற்கு, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கும் வசதி தேவைப்பட்டால், 9444977733 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.


உதவிகள் தொடரட்டும், இணைந்த கைகள் ஆறுதல் தரட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x