Published : 01 Dec 2015 12:23 PM
Last Updated : 01 Dec 2015 12:23 PM

களத்தில் ‘தி இந்து’: நீங்கதாங்க முதல்ல உதவியிருக்கீங்க

உதவும் கரங்கள் ஒன்றுசேர்கின்றன!



*

சேலம் விமான உதிரிபாகம் தயாரிப்பு நிறுவனத்தினர் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான போர்வைகள் வழங்கினர்

தமிழர்களின் கொடை உணர்வு என்றும் மாறாது என்பதை மெய்ப் பிக்கும் வகையில் கடலூர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ‘தி இந்து’ வாசகர்கள் ஒவ் வொருவரும் மனமுவந்து உதவி வருகின்றனர்.

வடகிழக்குப் பருவமழையால் பெருத்த சேதத்துக்கு உள்ளான கடலூர் மக்கள் உணவு, உடை, உறை விடம் இழந்து தவித்தனர். பாதிக்கப் பட்ட மக்களுக்கு ‘தி இந்து’ நாளிதழ் ஆதரவு கரம் நீட்டிய மாத்திரத்தில், மாநிலம் முழுவதும் இருந்து வாச கர்கள் பாய், போர்வை, உணவு பொருட் களைத் தாராளமாக தொடர்ந்து வழங்கி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் விமான உதிரி பாகம் தயாரிக்கும் பிரபல நிறுவனமான ‘ஏரோ பார்க்’ சார்பில், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஆயிரம் போர்வைகள் நேற்று வழங்கப்பட்டன.

சேலம், மல்லூரில் இயங்கி வரும் ‘ஏரோ பார்க்’ விமான உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனத்தின் நிறுவ னரும், முதன்மை செயல் அலுவலரு மான ஆர்.சுந்தரம், ‘தி இந்து’ குழு மத்தை தொடர்புகொண்டு, தானும், தனது ஊழியர்களும் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஆயிரம் போர்வை களை கடலூரில் குளிரில் தவிக்கும் மக்களுக்கு அளிப்பதாக உறுதி யளித்தார்.

கூட்டு முயற்சி

ஆர்.சுந்தரம், முனைவர் அன்பரசி சுந்தரம், இயக்குநர்கள் எம்.அசோக் குமார், கார்டுவெல், பொதுமேலாளர் ராமச்சந்திரன், துணைப் பொது மேலாளர் முரளிகிருஷ்ணன், முதன்மை நிதி மேலாளர் ஜோதி மற்றும் 180 ஊழியர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியில் ரூ.1.50 லட்சம் நிதி திரட்டி, நேற்று ஆயிரம் போர்வைகளை வழங்கினர்.

இதுகுறித்து ‘ஏரோ பார்க்’ நிறுவனர் ஆர்.சுந்தரம் கூறியதாவது: ‘தி இந்து’ எடுத்துள்ள அரிய முயற்சியை தின மும் நாளிதழில் படித்து வந்தேன். சாதாரண வாசகர்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை கடலூர் மக்க ளுக்கு உதவி வரும் ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

மக்கள் பணியில் மைல் கல்

நமது நிறுவனம் சார்பில் கடலூர் மக்களுக்கு உதவிட முதலில் ரூ.50 ஆயிரத்துக்கு போர்வைகள் வாங்கி வழங்குவதாக திட்டமிட்டோம். கட லூரில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும், அவர்க ளுக்கு நிறுவனம் சார்பில் போர்வை வழங்கலாம் என்ற எண்ணத்தை ஊழியர்களுடன் பகிர்ந்துகொண்ட மாத்திரத்தில், அவர்கள் ஒட்டு மொத்தமாக, சில மணி நேரத்தில் தங்களது பங்களிப்பாக, இவ்வளவு பெரிய தொகையை அளித்து வியப்பில் ஆழ்த்தினர்.

உதவும் மனம் மக்களுக்கு இருந்தும், அதற்கான மார்க்கமாக ‘தி இந்து’ செயல்பட்டு, மக்கள் பணியில் ஒரு மைல் கல்லாக விளங்கு கிறது என்று அவர் கூறினார்.

‘எங்க ஊருக்கு நீங்கதாங்க முதல்ல உதவியிருக்கீங்க’

‘தி இந்து’ நாளிதழ் மேற்கொண்ட முயற்சியால், ‘தி இந்து’ தமிழ் வாச கர்களும் கேபிஎன் டிராவல்ஸ் நிறுவன மும் இணைந்து கடலூர் மாவட்டத் தில் கடந்த 9 நாட்களாக நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள். அதன்படி நேற்று காட்டுமன்னார் கோவிலை அடுத்த கீழவன்னியூரில், 280 பயனாளிகளுக்கு பாய், போர்வை, ஹார்லிக்ஸ் மற்றும் ஓட்ஸ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக்கழக வேளாண் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை பயனாளிக ளுக்கு வழங்கினார். பொருட்களைப் பெற்றுக் கொண்ட கீழவன்னியூர் மக்கள், ‘தி இந்து’ நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது, ‘எப்ப மழை பெய்தாலும் எங்க கிராமம் பாதிக்கப்படுமுங்க. ஆனா, யாரும் உதவ வர்றதில்லை. முதல் முறையா நீங்க தான் உதவியிருக்கீங்க’ என்றனர்.

பலருக்குக் காய்ச்சல்

வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதி யான கீழவன்னியூரில் பலருக்கு காய்ச் சல் இருப்பதாகவும், சிகிச்சைப் பெற டவுனுக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் பலர் மிகுந்த கவலைக்குள்ளான நிலையில் இருப்ப தாகவும் அவர்கள் தெரிவித்தனர். அரசு சார்பில் எங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தினால் பெரும்பாலானோர் பயனடைவர் என்றனர்.

இது தொடர்பாக மாவட்ட சுகா தாரத் துறை இணை இயக்குநர் ஜவகர் லாலிடம் கேட்டபோது, ‘வெள்ள பாதிப்புக் குள்ளான பகுதிகளில் தீவிரமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. குடிநீரை காய்ச்சிப் பருகவேண்டும் எனவும், குடிநீரில் குளோரின் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகி றோம். கீழவன்னியூரில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடத்தி, தேவைப்படுமானால் மீண்டும் முகாம் நடத்தப்பட வேண்டும்’ என்றார்.

கூடுதலாக மண்ணெண்ணெய்

தொடர்ந்து மழை பெய்துவருவதால் கிராமப்புறங்களில் சமைக்க மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாகவும், பல நேரங்களில் உணவு சமைக்க முடி யாமல் பட்டினிக்கிடக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் மக்கள் கூறினர். அரசு சார்பில் கூடுதலாக 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என அவர்கள் கோரினர்.

களத்தில் ‘தி இந்து

$ 6,029 பேர், கே.பி.என். டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் வாசகர்களிடம் இருந்து ‘தி இந்து’ சேகரித்து வழங்கிய நிவாரணப் பொருட்களால் பயனடைந்திருக்கிறார்கள்.

$ 29 கிராமங்களில் ‘தி இந்து’ சேகரித்து வழங்கிய நிவாரணப் பொருட்கள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக நிம்மதி தந்திருக்கின்றன.

$ 4,861 பயனாளிகளுக்கு பாய், போர்வை போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கி உதவியிருக்கிறார்கள் நம் வாசகர்கள்.

$ 1,460 ஸ்டவ்களை அனுப்பியிருக்கும் வாசகர்களால், கடலூர் மழை, வெள்ளத்தில் பரிதவித்தவர்கள் உணவு சமைக்க முடிகிறது.

$ 1,900 உணவுப் பொருட்கள் பயனாளிகளின் பசியாற்றுகின்றன.

$ 400 பேருக்கு, ஹார்லிக்ஸ் மற்றும் ஓட்ஸ் பாக்கெட்டுகள், காட்டுமன்னார்கோவிலை அடுத்த கீழவன்னியூர் கிராமத்தில் நேற்று வழங்கப்பட்டன.

படங்கள் என். முருகவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x