Published : 27 Nov 2015 11:06 AM
Last Updated : 27 Nov 2015 11:06 AM

தொலைநோக்குத் திட்டம்!

அடிக்கடி இயற்கைச் சீற்றத்துக்கு உள்ளாகும் கடலூர் ஒரு கடற்கரை நகரம். வடிநிலம். தொழிற்சாலைகள் இங்கே அமைக்கப்பட்டபோது, நகரின் கட்டமைப்பு மாறியது. ஆனால், திட்டமிட்டு அதன் விரிவாக்கம் அமையவில்லை. கடற்கரை இங்கே எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதற்கு மோசமான உதாரணம்தான் அக்கரைக்கோரி, சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், தாழங்குடா உள்ளிட்ட மீனவக் கிராமங்கள். இங்கு எப்போது பார்த்தாலும் கடல் நீரால் சூழப்பட்டிருக்கும்.

சில்வர் பீச் ஏன் உள்வாங்கியிருக்கிறது? எல்லாவற்றிலும் திட்டமிடல்தான் பிரச்சினை. ஆக்கிரமிப்புகள் பிரச்சினை. கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாறு கெடிலம், பெண்ணையாறு, மணிமுத்தாறு, பரவானாறு உள்ளிட்ட ஐந்து ஆறுகளிலும் கரைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றில் பல அரசியல்வாதிகளால் நேரடியாக நடத்தப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகள் எல்லாம் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். கடலூர் இனி ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாத வகையில், தொலைநோக்குத் திட்டம் ஒன்றை அரசு அறிவிக்க வேண்டும்.

- ராஜு, மனித உரிமைச் செயல்பாட்டாளர், விருத்தாசலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x