Published : 20 Oct 2015 10:39 AM
Last Updated : 20 Oct 2015 10:39 AM

நாமக்கல் கவிஞரின் பன்முகத் தன்மை

நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையை என் பதிமூன்றாவது வயதில் சென்னை மெரினா கடற்கரையில் பார்த்தேன். அன்று நான் கடற்கரையில் மற்ற சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தேன்.

அவர் சின்ன அண்ணாமலையுடன் அமர்ந்து கடற்கரை கேண்டீனில் காபி அருந்திக் கொண்டிருந்தார். ஏற்கனவே நான் அவருடைய ‘மலைக் கள்ளன்’ புத்தகத்தையும் அதன் பின் அட்டையில் இருந்த அவருடைய கம்பீரமான புகைப்படத்தையும் பார்த்திருந்ததால் உடனே அடையாளம் கண்டு கொண்டேன். “இவர் யாரென்று தெரிகிறதா?“ என்று அவரைக் காட்டி கேட்டார் சின்ன அண்ணாமலை. “தெரியுமே!! அரசுக் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை” என்றேன் தாமதிக்காமல்.

“பார்த்தீர்களா..? சிறுவர்க ளுக்குக் கூட உங்களைத் தெரிகிறது” என்றார் சின்ன அண்ணாமலை. நாமக்கல் கவிஞர் மெதுவாகச் சிரித்துக்கொண்டார். அவருக்கு அப்போது சற்று செவிப் புலன் குறை உண்டு. நாமக்கல் கவிஞரின் சுயசரிதையான ’என் கதை’ தமிழ் உரைநடைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. அவர் கவிதைகளை விட இந்த புத்தகம் இலக்கியத்துக்கு மிகச் சிறந்தப் பங்களிப்பு எனலாம். அவருடைய வாழ்க்கை அனுபவங்களும் மிக சுவாரசியமானவை. அதேபோல அவர் ஒரு அற்புதமான ஓவியர்.

ஆங்கில அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் குடும்பப் படங்களை வரைந்து நிறைய சன்மானமும் விலை உயர்ந்த வெகுமதி களும் பெற்றிருக்கிறார். அவர் ஓவியங்கள் மூலம் பெற்ற வருவாய் இலக்கியத்தின் மூலம் பெற்றதை விட கணிசமானது என்றுகூட சொல்லலாம். ஆனால் ஏன் ஒன்று கூட ஆவணப்படுத்தப் படவில்லை? ஏன் அவருடைய ஓவியங்கள் எதுவுமே பார்வைக்குப் படுவதில்லை என்று தெரியவில்லை. ஒரு மகா கலைஞனின் ஒரு முகம் இந்த உலகுக்குத் தெரியாமலே இருப்பது வருத்தம் அளிக்கிறது.

நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையை என் பதிமூன்றாவது வயதில் சென்னை மெரினா கடற்கரையில் பார்த்தேன். அன்று நான் கடற்கரையில் மற்ற சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தேன். அவர் சின்ன அண்ணாமலையுடன் அமர்ந்து கடற்கரை கேண்டீனில் காபி அருந்திக் கொண்டிருந்தார். ஏற்கனவே நான் அவருடைய ‘மலைக் கள்ளன்’ புத்தகத்தையும் அதன் பின் அட்டையில் இருந்த அவருடைய கம்பீரமான புகைப்படத்தையும் பார்த்திருந்ததால் உடனே அடையாளம் கண்டு கொண்டேன்.

“இவர் யாரென்று தெரிகிறதா?“ என்று அவரைக் காட்டி கேட்டார் சின்ன அண்ணாமலை. “தெரியுமே!! அரசுக் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை” என்றேன் தாமதிக்காமல். “பார்த்தீர்களா..? சிறுவர்க ளுக்குக் கூட உங்களைத் தெரிகிறது” என்றார் சின்ன அண்ணாமலை. நாமக்கல் கவிஞர் மெதுவாகச் சிரித்துக்கொண்டார். அவருக்கு அப்போது சற்று செவிப் புலன் குறை உண்டு. நாமக்கல் கவிஞரின் சுயசரிதையான ’என் கதை’ தமிழ் உரைநடைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. அவர் கவிதைகளை விட இந்த புத்தகம் இலக்கியத்துக்கு மிகச் சிறந்தப் பங்களிப்பு எனலாம். அவருடைய வாழ்க்கை அனுபவங்களும் மிக சுவாரசியமானவை.

அதேபோல அவர் ஒரு அற்புதமான ஓவியர். ஆங்கில அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் குடும்பப் படங்களை வரைந்து நிறைய சன்மானமும் விலை உயர்ந்த வெகுமதி களும் பெற்றிருக்கிறார். அவர் ஓவியங்கள் மூலம் பெற்ற வருவாய் இலக்கியத்தின் மூலம் பெற்றதை விட கணிசமானது என்றுகூட சொல்லலாம். ஆனால் ஏன் ஒன்று கூட ஆவணப்படுத்தப் படவில்லை? ஏன் அவருடைய ஓவியங்கள் எதுவுமே பார்வைக்குப் படுவதில்லை என்று தெரியவில்லை. ஒரு மகா கலைஞனின் ஒரு முகம் இந்த உலகுக்குத் தெரியாமலே இருப்பது வருத்தம் அளிக்கிறது.

- கவிஞர் வைதீஸ்வரன், சென்னை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x