Last Updated : 12 Nov, 2020 03:14 AM

 

Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

கூட்டுச்சுமையாகிவரும் காங்கிரஸ்

பிஹாரில் மட்டுமல்லாது நாடு முழுக்கவும் எதிர்க்கட்சிகளால் தூற்றலுக்கு உள்ளாகியிருக்கிறது காங்கிரஸ். கட்சியின் கட்டமைப்பு – வல்லமைக்குப் பொருந்தாத வகையில் கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது, அதைத் தோற்பதன் வழி எதிராளிக்கு எளிதாக விட்டுக்கொடுப்பது என்கிற அதன் தொடர்கதை ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஆட்சிக் கனவுக்கு பிஹாரில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

பிஹாரில் காங்கிரஸுக்கு என்று செல்வாக்குமிக்க தலைவர் கிடையாது. ஏனைய கட்சிகளுக்கு உள்ளதுபோல ஏதேனும் ஒரு சமூகம்சார் அல்லது சித்தாந்தம்சார் பிணைப்பு அல்லது கவர்ச்சியும் காங்கிரஸுக்குக் கிடையாது. களத்தில் பணியாற்றிடத் துடிப்பான தொண்டர் படையும் கிடையாது. ஆனால், ‘மகா கூட்டணி’ என்ற பெயர் நிலைக்க ராஜதவுக்கு வேறு பெரிய கட்சிகள் எதுவும் துணைக்குக் கிடையாது என்பதை நன்கு பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ் அதிக தொகுதிகளைக் கேட்டது. ராஜத மறுத்தபோது கூட்டணியிலிருந்து விலகிவிடும் சமிக்ஞைகளை வெளியிட்டது. மேலும், டெல்லியிலிருந்தும் தேசியத் தலைவர்கள் வழி தேஜஸ்விக்கு அழுத்தங்களைக் கொடுத்தது. ஒருவழியாக 70 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றபோது பலரும் திகைத்தனர். ஏனென்றால், 2015 தேர்தலில் ‘மகா கூட்டணி’யில் 41 தொகுதிகளில் நின்ற காங்கிரஸ் 27 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்தது. இப்போது 29 தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட்டுகள் 16 தொகுதிகளை வென்றிருக்கும் சூழலில், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 தொகுதிகளை மட்டுமே வென்றிருப்பதும், ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில், ‘மகா கூட்டணி’ 110 இடங்களுடன் முடங்கிவிட்டிருப்பதும் பெரும் விமர்சனங்களை உண்டாக்கியிருக்கிறது.

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 41 தொகுதிகளில் நின்று 8 தொகுதிகளை மட்டுமே வென்று, ஏனைய 80% தொகுதிகளிலும் அதிமுக வெல்ல வழிவகுத்தது போன்ற கதையே பிஹாரிலும் இப்போது நடந்திருக்கிறது.

ஆனால், பாடம் படிக்க மறுக்கிறது காங்கிரஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x