Published : 06 Oct 2015 10:18 AM
Last Updated : 06 Oct 2015 10:18 AM

ஒரு தலைநகரம் போதாது!

‘இரண்டாம் தலைநகராகுமா மதுரை?’ கட்டுரையில் குறிப்பிட்டதுபோலத் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராகப் பாரம்பரியமிக்க மதுரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியம். இது தென்மாவட்ட மக்களின் பயணச் சுமையைக் குறைப்பதோடு அதிகாரப் பரவலுக்கும் வழிவகுக்கும். சரித்திர காலம் தொட்டே இந்த இரண்டாவது தலைநகர் வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது. சேர மன்னர்கள் உறையூரையும், வஞ்சியையும் தங்களின் தலைநகரங்களாகக் கொண்டு ஆட்சி புரிந்திருக்கின்றனர்.

அதுபோலவே பாண்டியர்களும் மதுரையையும் கொற்கையையும் ஒரே சமயத்தில் தலைநகராகக் கொண்டு நிர்வாகம் செய்திருக்கின்றனர். சவூதி அரேபியா போன்ற நாடுகளில் நிர்வாகத் தலைநகராக ரியாத்தும், ஆட்சித் தலைநகராக ஜித்தாவும் ஒரே நேரத்தில் செயல்பட்டுவருவதைக் காண்கிறோம். அதிக மக்கள்தொகையும், விரிந்த நிலப்பரப்பும் உள்ள தமிழகம் போன்ற ஒரு மாநிலத்துக்கு, மாநிலத்தின் தலைப் பகுதியில் இருக்கும் சென்னை மட்டுமே இருப்பது அதன் அடிப்பகுதியில் வாழ்கிற பொதுமக்களுக்குப் பல விதத்திலும் சிரமம் அளிக்கும் ஒன்றாகும். இந்த நியாயமான கோரிக்கை அரசியலாக்கப்படாமல் மாநில நிர்வாகம் ஒன்றையே கருத்தில் கொண்டு கவனிக்கப்பட வேண்டும்.

- கே.எஸ். முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x