Published : 09 Oct 2015 10:55 AM
Last Updated : 09 Oct 2015 10:55 AM

மகத்தான தலைவர் ஜே.பி.

‘லோக் நாயக்’ என்று அழைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணனைப் பற்றிய கட்டுரை அருமை.

ஜே.பி. எனும் தன்னலமற்ற அந்தத் தலைவர், காந்தியை ஆதரித்தாலும், எதிர்க்கவேண்டிய இடத்தில் துணிவோடு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

அடுத்தவரின் கொள்கைகளில் பிடித்ததை ஆதரிப்பது, பிடிக்காததை எதிர்ப்பது அதேசமயத்தில் சம்பந்தப்பட்ட மனிதரை வெறுக்காமல் இருப்பது என்ற அற்புதமான பாடம் இதில் ஒளிந்திருக்கிறது. காந்திஜி விஷயத் தில் இருந்த அதே தெளிவுதான் காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சிகள், ஜனசங்கம் ஆகியவற்றுடன் ஜே.பி.க்கு இருந்தது. நல்ல செயல்கள் நடந்திட அனைவரிடமும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற அவரது நற்பண்பின் வெளிப்பாடு இது.

மேலும், நெருக்கடி நிலையின்போது அடக்குமுறைகளுக்குப் பணியாமல் துணிவுடன் நின்றவர் அவர். பெரும் அரசியல் சக்தியை மக்களின் துணைகொண்டு எதிர்த்தவர். அவரது நினைவுநாளில் அவரைப் பற்றிய செறிவான கட்டுரையை வெளியிட்டதற்கு நன்றி.

- கேப்டன் யாசீன், திண்டுக்கல்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x